ஐம்பட்டை கத்திவால் அழகி
ஐம்பட்டை கத்திவால் அழகி (Graphium antiphates) தெற்காசியாவிலும் தன்கிழக்காசியாவிலும் காணப்படும் அழகிகள் குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சி ஆகும். தோற்றம்மேலிறக்கையின் அடிநிறம் ஆணிலும் பெண்ணிலும் வெண்மையே. முன்னிறகில் ஐந்து சிறிய கறுப்புப் பட்டைகள் தென்படும். இவையே இவ்வினத்துக்கான முக்கிய அடையாளம். ![]() அடியிறகின் கீழ்ப்புறமுள்ள கறுப்புக்கோடுகள் இறக்கைகளின் ஊடே மேலிருந்துபார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைந்துள்ளது. இதன் வால் கறுத்த சாம்பல் நிறத்தில், ஓரங்களில்மட்டும் வெள்ளையாக இருக்கும். ![]() முன்னிறகுகளின் கீழ்ப்புறம் மேற்புறத்தைப்போலவே இருப்பினும் மெல்லிய பச்சைநிறம் பரவியிருக்கும். பின்னிறகின் அடிப்புறம் பாதி பச்சையாகவும் மீதி வெண்மையாகவும் இருக்கும். உணர்வுக்கொம்புகள் கறுப்பாகவும், தலையிலும் கழுத்திலும் பெரிய கறுப்பான வரை நடுவில் ஓடும். மீதிக்கழுத்துப்பகுதி நீலமாக இருக்கும். வயிறு வெள்ளையாகவும் இருபுறம் கருப்புக்கோட்டுடனும் இருக்கும். இவற்றை ஐந்து பட்டைகள் சிறியதாகவும் குறுகலாகவும் இருப்பதைக்கொண்டே தோற்றத்தின் அடிப்படையில் நெருங்கிய இனமான கத்திவால் அழகிகளிடமிருந்து வேறுபடுத்தவியலும்.[1] நடத்தைஇது வெகுவாக ஈரிப்பான இடங்களில் உறிஞ்சுவதைக் காணலாம்.[2] வளர்ச்சிநிலைகள்இப்பூச்சியின் கம்பளிப்புழு தொடக்கத்தில் வெள்ளையாகவும் பின்னர் மஞ்சளாகவும் இருக்கிறது. மஞ்சள்தோற்றம் கத்திவால் அழகியைப் போன்றே இருக்கும். (Davidson & Aitken quoted in Bingham) இதன் கூட்டுப்புழு பச்சைஇறத்தில் மற்ற அழகிகளைப்போலவே பட்டுப்போன்ற வளையத்தோடு இருக்கும். The green pupa is as in all swallowtails held by a silk girdle. Unona lawii இனத்துச்செடியில் மட்டுமே பெரும்பாலும் இருக்குமென்றும் பாறைகளுக்கடியில் இருக்காதென்று கருதப்படுகிறது.(Davidson and Aitken)[1] ![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia