ஐரிய விக்கிப்பீடியா
தத்துவம்,[3] மரபியல்,[4] பழங்குடியினர் தொடர்பான கட்டுரைகள்[5] மற்றும் கடல்சார் சொற்களஞ்சியம்[6] போன்ற பல்வேறு தலைப்புகள் உட்பட பலவிதமான பாடப் பொருள்கள் தற்போது ஐரிய விக்கிப்பீடியாவின் உள்ளடக்கமாக உள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஐரிய கலைக்களஞ்சியத்தின் நிர்வாகக் குழுவினரிடம் அனுமதியுடன் படைப்புகள் நேரடியாக ஐரிய விக்கிப்பீடியாவில் பதிவேற்றப்படுகின்றன.[7] 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐரிய மொழியில் கட்டுரைகளின் எண்ணிக்கை 28,000 என்ற அளவை எட்டியது. இதனால் உலக விக்கிப்பீடியா தரவரிசையில் ஐரிய விக்கிப்பீடியா 85 ஆவது பெரிய விக்கிப்பீடியா என்ற நிலையை அடைந்தது. விசிபீட் என்ற பெயரால் அறியப்படும் ஐரிய மொழி விக்கிப்பீடியா அந்நாட்டு ஊடகங்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.[1][8][9] கற்றலை மீண்டும் கற்றல் தொழில்நுட்பத்திற்குள் கொண்டுவருவது குறித்த தனது ஆய்வறிக்கையில் டப்ளின் நகர பல்கலைக்கழகத்தின் பாரி மெக்முலின், ஐரிய விக்கிப்பீடியா ஒருபோதும் உலகின் மிகப் பரவலான மொழிகளின் விக்கிப்பீடியாக்களைப் போன்ற பல கட்டுரைகளைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் ஒரு பயனுள்ள அறிவு வளமாகும் என்று பரிந்துரைத்தார்.[10] சில குறிப்பிட்ட தலைப்புப் பகுதிகள் பற்றிய அறிவைத் தேடும்போது ஐரிய விக்கிப்பீடியா ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் உள்ள விக்கிபீடியாக்களை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் உணர்ந்தார். ஏனெனில் கட்டுரைகளின் பரிணாம வளர்ச்சியின் தன்மை எந்தவொரு மொழியிலும் அக்கட்டுரைகளின் முதன்மை அல்லது உறுதியான விக்கிப்பீடியா கட்டுரைகளைக் கொண்டிருக்க வழிவகுக்கும் என்பது அதற்கான காரணமாகும்.[10] பிற கல்வி ஆதாரங்கள் ஐரிய மொழி விக்கிப்பீடியா தளத்தின் கல்வி மதிப்பை வலியுறுத்தியுள்ளன. மூன்றாம் நிலை கல்வியல் கருவியாக ஐரிய விக்கிப்பீடியாவின் பங்கு விக்கிமீடியா பயன்பாட்டின் பின்னணியில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.[11] மேற்கு அயர்லாந்திலுள்ள கால்வே தேசிய பல்கலைக்கழகத்தின் கல்விச் செயல்திட்டங்கள் ஐரிய விக்கிப்பீடியாவை ஆதரிக்கின்றன.[12] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ஐரிய விக்கிப்பீடியாப் பதிப்பு
|
Portal di Ensiklopedia Dunia