பிரசெல்சிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடம்"ஐரோப்பிய நாடாளுமன்றம்" ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவல்முறை மொழிகளில் (பிரெசலில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில்)
ஐரோப்பிய நாடாளுமன்றம் (European Parliament, EP) ஐரோப்பிய ஒன்றியத்தின் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற அமைப்பாகும். ஐரோப்பிய ஒன்றியப் பேரவை, ஐரோப்பிய அணையத்துடன் ஒருங்கிணைந்து இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவாக்கச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. இந்த நாடாளுமன்றத்தில் 751 (முன்னதாக 766) நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்; இந்திய நாடாளுமன்றத்தை அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரும் வாக்காளர்களைக் கொண்ட மக்களாட்சி அமைப்பாகவும் நாட்டு எல்லைகளைக் கடந்த மிகப் பெரிய மக்களாட்சி அமைப்பாகவும் விளங்குகின்றது; தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 2009இல் 375 மில்லியனாக இருந்தது.[3][4][5]
1979ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பொது வாக்குரிமை மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இருப்பினும், ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான வாக்காளர் பங்கேற்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது; 1999 முதல் இது 50%க்கும் குறைவாக இருந்து வருகின்றது. 2014ஆம் ஆண்டில் 42.54% வாக்காளர்களே வாக்களித்தனர்.[6]
குறிப்புகள்
↑Participates in Commission but considers itself non-aligned.