ஒட்டாவா (Ottawa, /ˈɒtəwə/(கேட்கⓘ) or /ˈɒtəwɑː/) கனடா நாட்டின் தலைநகரம் ஆகும். இதுவே நாட்டின் 4வது பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தெற்கு ஒண்டாரியோவின் கிழக்குப்பகுதியில் ஒட்டாவா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் கியூபெக்கின்கெட்டினாவ் நகரம் அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து ஒட்டாவா-கெட்டினாவ் பெருநகரப் பகுதியாகவும் தேசிய தலைநகர வலயமாகவும் விளங்குகின்றன.[6] 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 808,391 ஆகும்.
1826இல் பைடவுண் என நிறுவப்பட்டு பின்னர் 1855இல் "ஒட்டாவா"வாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஒட்டாவா கனடாவின் அரசியலுக்கும் தொழினுட்பத்திற்கும் மையமாக விளங்குகிறது. ஆரம்பத்திலிருந்த இதன் எல்லைகள் பல்வேறு சிறு இணைப்புகள் மூலமாக விரிவுபடுத்தப்பட்டு 2001இல் புதிய நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. "ஒட்டாவா" என்ற பெயர் உள்ளூர் மொழியில் அடவே என்பதிலிருந்து வந்துள்ளது; இதன் பொருள் "வணிகமாடல்" என்பதாகும்.[7]
துவக்கத்தில் அயர்லாந்திய, பிரான்சிய கிறித்தவர்களாலான குடியேற்றம் தற்போது பலவகை மக்கள் வாழும் பன்முக பண்பாடுடை நகரமாக விளங்குகிறது. கனடாவில் மிகவும் படித்தவர்கள் வாழும் நகரமாக ஒட்டாவா விளங்குகிறது. இங்கு பல உயர்நிலை கல்வி, ஆய்வு மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன. உயர்ந்த வாழ்க்கைத்தரமும் குறைந்த வேலையற்றோர் தொகையும் கொண்டதாக உள்ளது. வாழ்க்கைத்தரத்திற்கான மெர்செர் மதிப்பீட்டில் (221 நகரங்களில்) 14வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள ரிடொ கால்வாய்யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.