ஒன்கே மக்கள்
ஒன்கே மக்கள் (Onge) எனப்படுவோர் அந்தமான் தீவுகளில் வசிக்கும் அந்தமான் மக்களின் ஒரு குறிப்பிட்ட பழங்குடிகள் ஆவர். இவர்கள் "நெகிரிட்டோக்கள்" எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக சிறிய அந்தமான் தீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுத் திடல்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் ரட்லண்ட் தீவு மற்றும் தெற்கு அந்தமான் தீவின் தென்முனையின் பகுதிகளிலும் சில கூடாரங்களில் வசிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடியே தமது உணவைத் தேடுகின்றனர். மக்கள் தொகைஓன்கே மக்கள் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து 50,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து[2][3]. கிபி 672 முதல் 1901 காலப்பகுதி வரை அந்தமானில் இடம்பெற்று வந்த குடியேற்றங்கள் காரணமாக ஒன்கே மக்களின் தொகை கணிசமான அளவு குறைந்து வந்தது. தற்போதுள்ள மக்கள் சிறிய அந்தமான் தீவில் இரண்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியின மக்களுடனான தொடர்பு, மற்றும் உணவுப் பழக்க வழக்க மாற்றங்களே இவர்களின் மக்கள்தொகைக் குறைப்பிற்கு முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன[4]. 1901 இல் இவர்களின் தொகை 672 ஆகவும், 1911 இல் 631 ஆகவும் 1921 இல் 346 ஆகவும்; 1931 இல் 250 ஆகவும், 1951 இல் (இந்திய விடுதலைக்கு கிட்டவாக) 150 ஆகவும் இருந்தது[5]. தற்போது (2008 இல்) இவர்களின் தொகை ஆக 100 மட்டுமே உள்ளது[6]. டிசம்பர் 2008 இல் நச்சு திரவத்தை அருந்தியதால் இவ்வினத்தின் 8 ஆண்கள் இறந்தனர். ஆல்ககோல் என நினைத்து மெத்தனால் என்ற நச்சுத் திரவத்தை அருந்தியதால் இவர்கள் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது[7]. மேலும் 15 ஒன்கே இனத்தவர் இந்நிகழ்வில் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்[8][9]. 2009 இல் நான்கு ஒன்கே இனப் பெண்கள் மீளத் திருமணம் செய்ய சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டனர். இவ்வினத்தில் பெண்கள் மீளத்திருமணம் புரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது[6]. இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia