ஒப்பந்தக் கூலி முறை

1815-இல் இலங்கையின் மலையகப் பகுதியின் தலைநகராக விளங்கிய கண்டியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு, அந்த மலைப் பகுதியில் காபியும் கொக்கோவும் பயிரிடப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய தென்னிந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களை வேலையில் சேர்வதற்கு முன்னர் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அந்த ஒப்பந்தத்திற்குப் பெயர்தான் ஒப்பந்தக் கூலி முறை.

ஆங்கிலேய முதலாளிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்தக் கூலி முறை எனும் அந்தப் புதிய முறை உருவாக்கப்பட்டது. இந்த முறை கங்காணி முறை என்று மலாயாவில் அழைக்கப்பட்டது. மலாயாவிற்குப் பின்னர்தான் இலங்கையில் அந்தக் கங்காணி முறை அமலுக்கு வந்தது. ஆனால், இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று அழைக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் இருந்து வரும் கிராமப்புற ஏழைக் குடியானவர்கள், இலங்கைத் தோட்ட முதலாளியிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவு அவருடைய தோட்டங்களில் பணிபுரிவதாகச் சொல்லி ஓர் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து அல்லது கைநாட்டுப் போட வேண்டும். ஒப்பந்தக் காலம் முடியும் முன்னர் அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மலைத் தோட்டங்களை விட்டு வெளியேறக் கூடாது. மீறினால் முதலாளி விதிக்கும் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya