ஒரு நொடியில்
ஒரு நொடியில் (Oru Nodiyil) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திகில் நகைச்சுவை திரைப்படம் ஆகும். சவுத்ரி இயக்கிய இப்படத்தில் புதுமுகம் மதன், சிருஷ்டி டங்கே, தபஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பார்வதிபுரம் என்ப பெயரில் படமாக்கப்பட்டது.[1] நடிகர்கள்
தயாரிப்புஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கிராமத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து, கிராமத்திற்குள் நுழையும் எவரையும் கொல்லும் ஒரு ஆவி பற்றிய படம் இது.[2] மதன், சிருஷ்டி டங்கே, தபஸ்ரீ, குஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளர்.[3] முன்னணி நடிகர்களில் டாங்கே தவிர அனைவரும் புதியவர்கள்.[4] கிராமத்தில் நிலவும் மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக மதன் நடித்துள்ளார்.[5] கவர்ச்சி வேடத்திற்கு டாங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இந்த படத்தில் முப்பரிமாண கிராபிக்ஸ் பெரிதும் பயன்படுத்துகிறது மேலும் இது இன்றைய காலத்தில் எடுக்கபட்ட ஒரு காதல் பரபரப்பூட்டும் படம் ஆகும். இந்த படம் குஜராத்தில் இருந்த இதேபோன்ற பண்டைய மர்ம நிகழ்வு பற்றியது.[6] படம் மிகவும் தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது. இசைபடத்தின் பாடல்களுக்கு ஷயக் பர்வீஸ் இசையமைத்துள்ளார்.[1][5][7]
ஜெயசூரியா அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia