ஒலக்கண்ணேஸ்வர ஆலயம்
ஒலக்கண்ணேசுவரக் கோயில் ("உலைக் கண்";[1] அல்லது ஒலக்கண்ணேஸ்வர ஆலயம், பரவலாக ஒலக்கண்ணாதர்; பிற பெயர்: "பழைய கலங்கரைவிளக்கம்")[2] தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள மாமல்லபுரம் நகரில் உள்ளது. கடற்கரைக் கோயில் போலன்றி இந்தக் கோயில் கட்டமைக்கப்பட்டக் கோயிலாகும்.[3] எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்டுள்ள இக்கோயில்,[2] நவீன கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள மகிடாசுரமர்த்தினி மண்டபத்தின் நேர்மேலாக, குன்றின் உச்சியில் உள்ளது; இதனால் இங்கிருந்து மாமல்லபுர நகரத்தின் இயற்கைக் காட்சிகளை காணவியலும். தெற்கில் ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் சென்னை அணுமின் நிலையம் இருப்பதால் இந்த பகுதி கூடுதல் பாதுகாப்புடன் உள்ளது; ஒளிப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.[4] இது சென்னை நகரத்திலிருந்து 58 கி.மீ. (36 மைல்) தொலைவிலும் செங்கல்பட்டிலிருந்து 20 மைல் (32 கி.மீ) தொலைவிலும் உள்ளது. ஒலக்கண்ணேசுவரக் கோயில் சிலநேரங்களில் தவறாக மகிசாசுரமர்த்தினிக் கோயில் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது சிவபெருமானை முதன்மையாகக் கொண்ட கோயிலாகும்.[5] 1984 முதல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களம் என அறிவிக்கப்பட்ட மாமல்லபுர மரபுச்சின்னங்களில் ஒன்றாகும்.[6] சொற்பிறப்பு![]() பொதுவாக, இந்தக் கட்டிடம் "ஒலகண்ணாதக் கோயில்" எனப்படுகின்றது. இது துவக்கத்தில் ஒலக்கண்ணேசுவரா என்று அழைக்கப்பட்டிருந்தது; இது "உலைக்ககண்ணீசுவரம்" (பொருள்: நெற்றியில் தீக்கண்ணை உடைய சிவன் கோயில்) என்பதன் திரிபாகும்.[7] இக்கோயில் மகிடாசுரமர்த்தினி மண்டபத்தின் (குகைக் கோயில்) மேலுள்ளதால் சில நேரங்களில் தவறாக மகிசாசுரக் கோயில் எனப்படுகின்றது. புவியியல்ஒலக்கண்ணேசுவரக் கோயில் மகாபலிபுரம் (மாமல்லபுரம்) நகரில் உள்ளது. கிழக்கு நோக்கியுள்ள கோயிலை பாறைகளில் வெட்டப்பட்டுள்ள படிகள் மூலமே எட்ட முடியும். தற்கால கலங்கரைவிளக்கத்திற்கு அருகில், குன்றின் உச்சியில் மகிடாசுரமர்த்தினி மண்டபத்திற்கு நேர்மேலே அமைந்துள்ளது. சென்னை நகரத்திலிருந்து 58 கிலோமீட்டர்கள் (36 மைல்) தொலைவிலும் செங்கல்பட்டிலிருந்து 32 கி.மீ. (20 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.[8][9] வரலாறுகடற்கரைக் கோயிலைப் போன்றே ஒலக்கண்ணேசுவரக் கோயிலும் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டப்பட்டது. 1900இல் அருகிலுள்ள நவீன கலங்கரைவிளக்கம் கட்டப்படுவதற்கு முன்னதாக ஒலகண்ணேசுவரக் கோயிலின் உச்சிக்கூரையில் மரத்தாலான கலங்கரைவிளக்க அமைப்பு இருந்திருக்கலாம் என தொல்லியல் அறிஞர் ஆல்பர்ட்டு லாங்கர்ஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.[9][10] இந்தக் கோயிலில் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை வழிபாடு நடந்துவந்துள்ளதாகத் தெரிகிறது.[9][10] சிறப்புக்கூறுகள்![]() வெளிர்சாம்பல் நிற கருங்கற்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.[11] கோயிலின் விமானம் கடற்கரைக் கோயிலின் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியிலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும்; தற்போது விமானமேதும் இல்லை. ஓர் சிறிய அர்த்த-மண்டபத்தை அடுத்து செவ்வக வடிவில் கருவறை அமைந்துள்ளது. கருவறை வாயிலில் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களின் (வாயிற்காவலர்) உடல்கள் பாதியாக உள்ளதே இங்குள்ள வழமைமாறிய கூறாகும்; முழுமையான உடலை வடிக்க இடமிருந்தபோதும் பாதி உடலே செதுக்கப்பட்டுள்ளது. இது மகாபலிபுரத்து கோயில்களில் காணப்படும் பொதுவான கூறாகும்; இதேபோல திரிமூர்த்திக் குடவரைக் கோயிலிலும் பாதி உடல் துவாரபாலகர்களைக் காணலாம். இது மகேந்திர வர்ம பல்லவனின் சிற்ப பாணியிலிருந்து இராச சிம்மன் மாறியதைக் காட்டுகின்றது. முழுமையான உடலைக் காண்பிப்பதிலிருந்து முக்கால், அரை என படிப்படியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் கோயிலின் பின்புறம் செதுக்கப்பட்டுள்ள காவலர்கள் முழுமையான முன்பகுதியுடன் காணப்படுகின்றனர்.[9][10] இந்தக் கட்டிடம் முன்னதாக செங்கற் கட்டுமானத்தால் உட்பூச்சு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.[12] வெளிப்புற சுவர்களில் அர்த்த மண்டபத்தின் பள்ளங்களில் இரண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களால் சூழப்பட்டுள்ள , சிவன் காலனைக் கொல்வது போன்ற இந்த சிற்பங்கள் பிற்கால சேர்க்கைகளாக இருக்கலாம்; பல்லவர்களால் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. கருவறையின் வெளிப்புற சுவர்களில் சிற்பங்கள் பள்ளங்களில் செதுக்கப்பட்டுள்ளன; தெற்கில் மரநிழலில் அமர்ந்தநிலையில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் கயிலை மலை மீது சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்க இராவணன் மலையை அசைக்க முயல்வதும் வடக்கு சுவரில் நடராசர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் சிதிலமடைந்துள்ளன; மேலும் இவற்றின்மீதே பூச்சு கொடுக்கப்பட்டு வர்ணமும் தீட்டப்பட்டுள்ளதால் துவக்கநிலை சிற்பத்தைக் காணவியவில்லை. பல சிங்கங்கள் சுவர்த்தூண்களில் தீட்டப்பட்டுள்ளன. கருவறைக்குள் எந்த தெய்வத்தின் சிலையும் இல்லை.[9][10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia