ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (இலண்டன்)
ஒலிம்பிக்கு விளையாட்டரங்கம் (Olympic Stadium) இங்கிலாந்திலுள்ள ஒலிம்பிக்கு பூங்காவில் கட்டப்பட்டு வருகிறது. இது 2012 கோடைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் முதன்மை மையமாக வடிவமைக்கப்படுகிறது; தடகள விளையாட்டுக்களும் ஒலிம்பிக் திறப்பு விழா, இறுதி விழா நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. இது இலண்டன் மாநகரின் கீழ் லீ பள்ளத்தாக்கில் இசுட்ராஃபோர்டு மாவட்டத்தில் மார்ஷ்கேட் லேனில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கில் ஏறத்தாழ 80,000 பார்வையாளர்கள் விளையாட்டுக்களைக் கண்டு களிக்கலாம். ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பிறகு இதன் பார்வையாளர் அளவு குறைக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக இது பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய விளையாட்டரங்கமாக உள்ளது. 2017ஆம் ஆண்டு தடகள சாதனையாளர் போட்டிகளுக்கு இந்த விளையாட்டரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia