ஒலி மாசு![]() ![]() ஒலி மாசு (Noise pollution) என்பது மனிதர்களின், விலங்குகளின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவித்து இடையூறு செய்யும் சத்தம் அல்லது ஒலியைக் குறிக்கிறது. வேண்டாத இந்த இரைச்சலானது உலகெங்கிலும் இயந்திரங்கள், போக்குவரத்து வாகனங்களான, தானுந்து, பேருந்து போன்ற மோட்டார் வாகனங்கள் போன்ற போக்குவரத்து அமைப்புகளால் உண்டாகிறது. [1] [2] மோசமான நகரத் திட்டமிடல் ஒலி மாசுபாட்டிற்கு வழிவகுப்பதாக உள்ளது. குடியிருப்பு கட்டிடங்களுக்கு அருகே தொழில்துறைப் பகுதிகளை அமைப்பது குடியிருப்பு பகுதிகளில் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் ஒலி மாசிற்கு முக்கிய காரணங்கள் சிலவற்றில் உரத்த இசை, போக்குவரத்து (தொடருந்து, வானூர்தி போக்குவரத்து போன்றவை), புல்வெளி பராமரிப்பு, கட்டுமானம், மின்னாக்கிகள், காற்றாலை விசையாழிகள், சத்தமாக பேசும் மக்கள் ஆகியவை அடங்கும். நகர்ப்புறச் சூழல்களில் ஒலி மாசுடன் தொடர்புடைய ஆவணப்படுத்தப்பட்ட சிக்கல்கள் பண்டைய உரோமின் காலம் வரை செல்கின்றன. [3] அமெரிக்காவில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள், சிறுபான்மை இனத்தினர் வசிக்கும் பகுதிகளில் ஒலி மாசுபாடு மிக அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. [4] மேலும் வீட்டு மின்னாக்கிகளுடன் தொடர்புடைய ஒலி மாசுபாடு பல வளரும் நாடுகளில் பெருகி வரும் சுற்றுச்சூழல் சீரழிவாகும் . [5] அதிகமான ஒலி அளவுகள் மனிதர்களில் இததய பாதிப்புகளுக்கும், குருதி ஊட்டக்குறை இதய நோய் அதிகரிப்பதற்கும் ஒரு காரணமாகக் கூடும். [6] [7] ஒலி மாசு நிரந்தரமாக கேட்கும் திறனை இழப்பதற்கும் காரணமாகிறது. [8] ![]() கருவிகள்![]() ஒலி நிலை மானிகள்ஒலியை அளவிட, ஒலிவாங்கி, பெருக்கி, நேர மானி அகியவற்றை உள்ளடக்கியதாக ஒலி அளவு மானி என்ற சாதனம் பயன்படுத்தப்படுகிறது. [10] ஒலி நிலை மானிகளில் வெவ்வேறு அதிர்வெண்களில் (பொதுவாக A- மற்றும் C-எடையிடபட்ட நிலைகள்) ஒலியை அளவிடலாம். ஒலி நிலை மானிகள் மின்தொழில்நுட்ப ஆணையம் (IEC) [11] மற்றும் அமெரிக்காவில், அமெரிக்க தேசிய தரநிலை நிறுவனம் வகை 0, 1 அல்லது வகை 2 ஆகிய கருவிகளுக்கு தேவையான தரநிலைகளை நிர்ணயிக்கின்றன. [12] வகை 0 சாதனங்களானது, வகை 1 மற்றும் வகை 2 இல் எதிர்பார்க்கப்படும் அதே அளவுகோல்களை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அறிவியலாளர்கள் இவற்றை ஆய்வகங்களில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். [12] வகை 1 (துல்லியம்) கருவிகள் ஒலி அளவீடுகளை துல்லியமாக அறிய பயன்படுவனவாகும். அதே நேரம் வகை 2 கருவிகள் பொதுவான களப் பயன்பாட்டிற்கானவை ஆகும். [12] டோசிமீட்டர்கள்ஒலி அளவு மானியைப் போன்ற ஒரு சாதனமாக ஒலி டோசிமீட்டரைப் பயன்படுத்தியும் ஒலியை அளவிட முடியும். சிறியதாக உள்ள இதன் அளவைக் கருத்தில் கொண்டு தனிநபர்கள் இதை எடுத்துச் செல்கின்றனர். தொழில் நிறுவனங்களில் வெளியாகும் தனிப்பட்ட ஒலியை அளவிட டோசிமீட்டர்களைப் பயன்படுத்துகின்றனர். திறன்பேசி பயன்பாடுகள்![]() அண்மைய ஆண்டுகளில், அறிவியலாளர்களும் ஒலிப் பொறியாளர்களும் தனித்தனி ஒலி மானிகள் மற்றும் டோசிமீட்டர்களைப் போலவே, ஒலி அளவீடுகளைக் கணக்கிட திறன்பேசி செயலிகளை உருவாக்கி வருகின்றனர். 2014 ஆம் ஆண்டில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் (CDC) உள்ள தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH), ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு திறன்பேசிகளில் 192 ஒலி அளவீட்டு செயலிகளின் செயல்திறனை ஆய்வு செய்து ஒரு ஆய்வை வெளியிட்டது. [13] [14] ஆப் ஸ்டோரில் இருந்த 10 செயலிகள் மட்டுமே முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்க அளவுகோல்களையும் முழுமை செய்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த 10 செயலிகளில், 4 செயலிகள் மட்டுமே குறிப்பிட்டத் தரத்திலிருந்து 2 dB (A) இக்குள் துல்லியமாக அளவுகோல்களை நிறைவு செய்தன. [13] [14] இந்த ஆய்வின் விளைவாக, ஒலியைக் கண்காணிக்கும் செலவுகளைக் குறைக்கும் விதமாக NIOSH ஒலி நிலை மானி செயலியை அவர்கள் உருவாக்கினர். [13] [14] இந்த செயலி ANSI S1.4 மற்றும் IEC 61672 தேவைகளுக்கு ஏற்றதாக உள்ளது. [15] தாக்கங்கள்மனித உடல் நல பாதிப்புகள்ஒலி மாசுபாடு உடல் நலத்தையும் நடத்தையையும் பாதிப்பதாக உள்ளது. தேவையற்ற ஒலி உடலியல் ஆரோக்கியத்தையும் மன நலனையும் பாதிக்கிறது. ஒலி மாசுபாடு இதயக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், மிகை மன அழுத்தம், காதிரைச்சல், காது கேளாமை, தூக்கக் கலக்கம் போன்ற பல உடல்நலக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. [6] [16] [17] ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, 81 டெசிபல்களுக்கு மேல் ஒலி அளவை கொண்டுள்ள பகுதியில் உள்ள பாக்கித்தானின் மக்களின் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் கூட்டியுள்ளது தெரியவருகிறது. [18] தற்போதுள்ள ஆய்வுக் கட்டுரைகளில் 2019 ஆண்டைய ஆய்வின்படி, ஒலி மாசுபாடு அறிவாற்றலை விரைவாக வீழ்ச்சியடையவைத்தலுடன் தொடர்புடையதாக உள்ளது. [19] ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் கூற்றுப்படி, ஐரோப்பா முழுவதும் 113 மில்லியன் மக்கள் 55 டெசிபல்களுக்கு மேல் சாலை போக்குவரத்து இரைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வரையறையின்படி, இந்த அதிகப்படியான ஒலியளவு மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும். [20] தூக்கம், உரையாடல் போன்ற சாதாரண செயல்பாடுகளில் மிகை ஒலி தொந்தரவாகும்போது அது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைப்பதாகிறது. [21] 85 A- டெசிபெல் ஒலி அளவுகளுக்கு மேல் நீண்ட நேரம் கேட்கும் நிலைக்கு உள்ளானால் அதனால் காது கேளாமை ஏற்படலாம். [22] போக்குவரத்து, தொழில்துறை ஆகியவற்றால் ஏற்படும் ஒலியால் மிகக் குறைவாகவே தாக்கத்துக்கு உள்ளான மாபன் பழங்குடியினரை, அமெரிக்க மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மிதமான அளவு ஒலி மாசால் நீண்டகாலமாக பாதிக்கப்படும் அமெரிக்க மக்களின் காது கேளாமைக்ககு ஒரு காரணமாகிறது என்பதைக் காட்டுகிறது. பணியிடத்தில் ஏற்படும் ஒலி மாசால், சத்தத்தால் ஏற்படும் காது கேளாமை மற்றும் பிற உடல்நலச் சிக்கல்களுக்கும் ஒரு காரணமாகிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழில்சார் காது கேளாமை என்பது மிகவும் பொதுவான வேலை தொடர்பான நோய்களில் ஒன்றாகும். [23] காட்டுயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்கப்பல்கள், வாகனப் போக்குவரத்து, வானூர்திகளால் ஏற்படும் சத்தமானது வனவிலங்குகளின் வாழ்வைப் பாதிக்கும். இதனால் அவை இந்தத் தொந்தரவு இல்லாத வாழ்விடங்களைச் சென்று அடைய விரும்பலாம். [24] பல விலங்குகள் தங்கள் இனத்திற்குள் மற்ற விலங்குகளைத் தொடர்பு கொள்ள ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. அவை இனப்பெருக்க நோக்கங்களுக்காகவோ, வழிகாட்டவோ அல்லது இரையை அல்லது வேட்டையாடிகளைப் பற்றி மற்றவிலங்குகளுக்கோ தெரிவிப்பதாக இருக்கலாம். இருப்பினும், மானுடவியலால் ஏற்படும் ஒலி மாசுகளால் வன விலங்குகள் இந்த ஒலிகளைக் கேட்டறிவதைக் தடுக்கின்றன. இது அவற்றின் ஒட்டுமொத்த தகவல்தொடர்பையும் பாதிக்கின்றன. [25] பறவைகள், நீர்நில வாழ்வன, ஊர்வன, மீன்கள், பாலூட்டிகள், முதுகெலும்பற்றவை போன்ற உயிரினங்கள் ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்படும் உயிரியல் குழுக்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். [24] [26] விலங்குகள் தாங்கள் எழுப்பும் ஒலிகளால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள முடியாவிட்டால், இனப்பெருக்கம் குறைவது (துணையைக் கண்டுபிடிக்க முடியாமல் போவதால்), இறப்பு அதிகரிப்பது (வேட்டையாடி விலங்குகள் குறித்து பிற விலங்குகள் எழுப்பும் எச்சரிக்கை ஒலியைக கேட்க இயலாமை) போன்றவற்றிற்கு காரணமாகும். [24] நகர்ப்புற சூழல்களில் வசிக்கும் ஐரோப்பிய ராபின்கள் பகலில் அதிக அளவு ஒலி மாசுபாடு உள்ள இடங்களில் இரவில் பாடுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. இரவு அமைதியாக இருப்பதால் அவை இரவில் பாடுகின்றன என்றும், அவற்றின் செய்தி அப்போது இன்னும் தெளிவாகப் பரவக்கூடும் என்பதாகும். [27] அதே ஆய்வில் பகல் நேர ஒலி மாசுபாடும், இரவு நேர ஒளி மாசும் இரவு நேரத்தில் அவை பாடுவதற்கான ஒரு வலுவான காரணமாக இருப்பதாக அந்த ஆய்வு காட்டுகிறது. மானுடவியல் ஒலி மாசானது அமெரிக்க வெப்பமண்டல நகர்ப்புற பூங்காக்களில் காணப்படும் பறவைகளின் இனங்கள் செழுமையைக் குறைத்துள்ளது. [28] ஒலிக் கட்டுப்பாடு![]() ![]() தொழில்துறையில் ஒலி கட்டுப்பாடுப் படிநிலைக் கட்டமைப்புகளை உருவாக்குதல் பெரும்பாலும் சுற்றுச்சூழலிலோ அல்லது பணியிடத்திலோ ஒலியைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. பொறியியலில் இரைச்சல் கட்டுப்பாடுகள், ஒலி பரவலைக் குறைக்கவும், தனிநபர்களை ஒலி மாசிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒலிக் கட்டுப்பாடுகள் சாத்தியமற்றோ அல்லது போதுமானதாகவோ இல்லாத இடத்தில், தனிநபர்கள் ஒலி மாசுபாட்டினால் ஏற்படும் தீங்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மக்கள் அதிக சத்தம் கேட்கும் இடங்களில் இருக்க வேண்டிய நிலையிருந்தால், அவர்கள் தங்கள் காதுகளைப் பாதுகாக்க காது பாதுகாப்புப் (எ.கா. காது சொருகிகள் அல்லது காது மூடிகள்) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். [29] தொழில்சார் இரைச்சல் பாதிப்புகளுக்கு எதிரான முயற்சியில், அமைதியானதை வாங்குங்கள் (Buy Quiet) என்ற திட்டங்களும் முன்முயற்சிகளும் தோன்றியுள்ளன. இந்த திட்டங்கள் ஒலியை எழுப்பாத கருவிகளையும், உபகரணங்களையும் வாங்குவதை ஊக்குவிக்கின்றன. மேலும் ஒலி எழுப்பாத உபகரணங்களை வடிவமைக்க உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். [30] சாலைகள் மற்றும் பிற நகர்ப்புற காரணிகளில் உருவாகும் சத்தத்தை நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சிறந்த சாலை வடிவமைப்பு மூலம் குறைக்க முடியும். சாலையில் இரைச்சலை குறைப்பதற்கு பல விதமான யோசனைகள் உள்ளன, அவை: இரைச்சலை தடுக்கும் கருவிகளை பயன்படுத்துதல், வண்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்துவது, சாலையின் மேற்பரப்பு அமைப்பை மாற்றுதல், சுமையுந்துகளைக் கட்டுப்படுத்துதல், பிரேக்கிங் (தடை) மற்றும் முடுக்கத்தைக் குறைக்க வாகன ஓட்டத்தை மென்மையாக்கும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல், வண்டி சக்கரத்தின் வடிவமைப்பை மாற்றுதல் போன்றவை ஆகும். இந்த யுக்திகளை செயல்படுத்த முக்கியமாக கணினியை பயன்படுத்தி சாலையில் நிலவும் போக்குவரத்து இரைச்சலை கட்டுப்படுத்துதல், அதன் மூலமாக சாலையில் இயற்கையாக அமைந்துள்ள மேடு பள்ளங்களின் தன்மை, வானிலை மாற்றங்கள், போக்குவரத்து அடர்த்தி, போக்குவரத்து நெரிசல் நிலவரங்கள், பயணம் மேற்கொள்ளும் நேரம், காலம் மற்றும் வேளை, மேலும் இரைச்சலை குறைக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே சீராக போக்குவரத்து செயல் படுவதற்கு வழி வகுப்பது மிகவும் இன்றியமையாததாகும். விமானப் போக்குவரத்தில் ஏற்படும் இரைச்சலை ஜெட் இயக்கியை மாற்றி அமைப்பதால் ஒலியைக் குறைக்க குறைக்கலாம். விமானப் பாதைகளையும், ஓடுபாதை நேரத்தையும் மாற்றுவது விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு பயனளித்துள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia