ஒளிவட்ட மின்னிறக்கம்![]() ![]() ஒளிவட்ட மின்னிறக்கம் (Corona discharge) என்பது மின்னிறக்கத்தால் ஏற்படும் ஒரு நிகழ்வாகும். மின்னோட்டம் பாயும் கடத்தியைச் சுற்றியுள்ள மின்னூட்டம் பெற்ற பாய்மப் பொருட்களால் ஒளிவட்ட மின்னிறக்கம் நிகழ்கிறது. அதிக மின்னழுத்தம் உள்ள கம்பிகளில் மின் புலச் செறிவைக் குறைக்காவிட்டால், கம்பிகளில் தானாகவே மின்னிறக்கம் நடைபெறுகிறது. மின்னோட்டம் பாயும் கடத்தியில் உருவாகும் மின்னிலை சரிவின் (Potential gradient) செறிவு அதிகமாக இருக்கும் போது மின்னிறக்க வட்டம் (Corona) உருவாகிறது. மின்னிலை சரிவின் (Potential gradient) செறிவின் அளவு மிக அதிகமாகும் போது மின் முறிவு (Electrical breakdown) அல்லது மின்வில் (Electric arc) உருவாகிறது. வாயு விளக்குகள் நீல நிறத்தில் ஒளியை உருவாக்குவது போல், மின்னழுத்தம் அதிகமுள்ள இடங்களில் மின்னிறக்க வட்டம் உருவாகிறது. மின்னிறக்கம் என்பது அதிக மின்னழுத்தம் உள்ள கம்பிகளில் மின் ஆற்றல் இழக்கச் செய்யும் ஒரு நிகழ்வாகும். மின் ஆற்றலை உற்பத்தியாகும் இடத்திலிருந்து பயன்படுத்துமிடம் வரை கடத்தும் போது, மின்னிறக்கம் காரணமாக ஒரு குறிப்பிடத்தக்க அளவில் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. அதிக மின்னழுத்தத்தில் வேலை செய்யக்கூடிய தொலைக்காட்சி, ரேடியோ பரப்பிகள் (Radio transmitter), X கதிர் எந்திரம், துகள் முடுக்கிகள்ஆகியவற்றில் மின்னிறக்கம் காரணமாக ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. மின்னிறக்கத்தால் காற்றில், ஓசோன் (O3), நைட்ரிக் ஆக்சைடு (NO), நைட்ரசன் டை ஆக்சைடு (NO2) ஆகிய வாயுக்கள் உருவாகின்றன. இவற்றின் மூலம் காற்றிலுள்ள ஈரப்பதத்தால் நைட்ரிக் அமிலம் உருவாகிறது. இவ்வாயுக்கள் தமக்கருகிலுள்ள பொருட்களைச் சிதைவுறச் செய்வதுடன், நச்சுத்தன்மையுள்ள வாயுக்களையும் உருவாக்குகிறது. அதிக மின்னழுத்தம் உள்ள கம்பிகளைக் மின் காப்பிடுவதன் மூலமும், வழுவழுப்பான வட்ட வடிவில் கம்பிகளை (காரோண வளையம்) உருவாக்குவதன் மூலமும் மின்னிறக்கம் உருவாவதைக் குறைக்கலாம். எனினும் காற்று வடிகட்டிகள், ஒளிநகல் சாதனங்கள் (photocopier) மற்றும் ஓசோன் இயற்றிகள் ஆகியவற்றில் கட்டுபடுத்தப்பட்ட முறையில் மின்னிறக்கம் பயன்படுகிறது. அறிமுகம்'ஒளிவட்ட மின்னிறக்கம் என்பது மின்னோட்டம் அதிக மின்னழுத்தம் உள்ள கம்பிகள் மூலம், மின்சுமையற்ற காற்றின் வழியே பாயும் போது, மின் கம்பியைச் சுற்றி அயனியாக்கல் முறையில் பிளாசுமாவை உருவாக்கும் முறையாகும். இந்த அயனிகள் அருகிலுள்ள மின்சுமையற்ற காற்றுடன் மீண்டும் சமன் செய்யப்படுகின்றன. ஒரு மின்புலத்தின் மின்னழுத்த வாட்டம் (Potential gradient) மிக அதிகமாக இருந்தால், அவ்விடத்திலுள்ள பாய்மப் பொருட்கள் அயனியாக்கப்பட்டு மின் கடத்தும் தன்மையைப் பெறுகின்றன. மின்னூட்டம் பெற்ற ஒரு பொருளின் கூறான பகுதிகளில் மற்ற பகுதிகளை விட மின் புலச் செறிவு அதிகமாக இருக்கும். இவ்வாறு கூறான பகுதிக்கு அருகிலுள்ள காற்று அயனியாக்கப்பட்டு மின் கடத்தும் தன்மையைப் பெறுகின்றன. மின் கடத்தும் பொருளின் அளவும், காற்றின் அருகாமையும் அயனியாக்கப்படும் தன்மையை அதிகமாக்குகின்றன. அயனியாக்கப்படும் காற்றின் அளவு அதிகரித்துக் கொண்டே போகப்போக மின் கடத்தும் பொருளுக்கும், அயனியாக்கப்பட்ட காற்றுக்கும் இடையேயான மின்னழுத்த வேறுபாடு குறைந்து, இரண்டுக்குமிடையே ஓரு மின் கடத்தும் பாதை உருவாகிறது. இறுதியில் ஒரு மின் வில் தோன்றுகிறது. பொதுவாக மின்னிறக்கம், மின் கடத்தும் பொருளின் வளைந்த பகுதிகளிலும், கூறான பகுதிகளிலும், துருத்திக் கொண்டிருக்கும் (projecting) பகுதிகளிலும், உலோக விளிம்புகளிலும், குறைந்த தடிமனுள்ள கம்பிகளிலும் அதிகமாக இருக்கும். மின் கடத்தும் பொருளில் வளைவு மிக அதிகமாக இருந்தால் மின்னழுத்த வாட்டம் (potential gradient) மிக அதிகமாக இருக்கும்.அதனால் அந்த இடங்களில் காற்று அயனியாக்கப்பட்டு பிளாசுமாவை உருவாகும்.இவற்றைக் குறைக்க, வழுவழுப்பான உலோக விளிம்புகளும், அதிக தடிமனுள்ள உருண்டையான கம்பிகளை பயன்படுத்த வேண்டும். அதிக மின்னழுத்தம் உள்ள மி்ன் கம்பிகளுக்குக் காப்பிட வேண்டும். மின்னிறக்கம் என்பது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ (positive or negative) இருக்கும். அதிக மின்னழுத்தம் உள்ள மி்ன் கம்பியின் முனைவுத்தன்மையைப் (polarity) பொறுத்து அமையும். வளைந்த மின்வாய் நேர்மறையாக இருந்தால் மின்னிறக்கம் நேர்மறையாக இருக்கும். வளைந்த மின்வாய் எதிர்மறையாக இருந்தால் மின்னிறக்கம் எதிர்மறையாக இருக்கும். நேர்மறை மின்னிறக்கத்தில் அயனிகளும், எதிர்மறை மின்னிறக்கத்தில் இலத்திரன்களும் இருக்கும். மின்னிறக்கங்கள் ஓசோனை (O3) உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. எதிர்மறை மின்னிறக்கம் நேர்மறை மின்னிறக்கத்தை விட அதிக ஓசோனை (O3) உருவாக்கும். ![]() பயன்பாடுகள்மின்னிறக்கங்களால் தொழில் சார்ந்தும், வர்த்தக ரீதியாகவும் பல பயன்பாடுகள் உள்ளன.
மின்னிறக்கத்தால் பொருட்களின் மேற்பரப்பில் மின்னூட்டம் உருவாக்கப்படுவதால், இந்த தத்துவம் ஒளி நகல் எடுக்கும் கருவியில் பயன்படுகிறது. காற்றில் உள்ள தூசிகளை நீக்க உதவுகிறது. எதிர் மின்னூட்டம் பெற்ற துகள்களை அனுப்புவதன் மூலம், காற்றில் உள்ள தூசிகள் நமன்செய்யப்பட்டு கீழே விழுந்து விடுகிறது. காற்றிலுள்ள நச்சு வாயுக்களை நீக்கவும், ஓசோனை (O3) உருவாக்குவும் உதவுகிறது. விளைவுகள்மின்னிறக்கத்தால் கேட்கக்கூடிய மற்றும் ரேடியோ அதிர்வெண் இரைச்சல்களை உருவாகும். மின்னோட்டம் பாயும் கம்பியில் தேவையற்ற மின் இழப்பு ஏற்படுகிறது. துகள்மங்கள் (particulate), ஓசோனை (O3), நைட்ரசன் சேர்மங்கள் ஆகியவற்றை சில இடங்களில் தேவையில்லாமல் உருவாகிறது. இதனால் மாசுபாடு ஏற்படுகிறது. கீழ்கண்டவற்றில் மின்னிறக்கம் ஒரு தேவையற்ற விளைவாகும்
மின்னிறக்க சுருள்வட்ட வளையங்களை (corona ring) பயன்படுத்துவதன் மூலம் மின்புலம் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமாக பிரிக்கப்பட்டு, மின் இழப்பு குறைக்கப்படுகிறது. இயங்கும் விதம்கட்டுப்படுத்தமுடியாத தொடர்வினைகளால் மின்புலம் மின்னிறக்கத்தை உருவாக்குகிறது. மின்புலம் உருவாக்கும் இலத்திரன்கள், காற்றை அயனியாக்கும் அளவிற்கு வலிமையைப் பெறுகின்றன. இவை கீழ்க்கண்டவாறு செயல்படுகிறது.
பீக்கின் விதி (Peek's law) எந்த மின்னழுத்தத்தில் மின்னிறக்கங்கள் தொடங்கும் என்பதை விளக்குகிறது. நேர் ஒளிவட்ட மின்னிறக்கம்பண்புகள்
இயங்கும் விதம்கடத்திகளைச் சுற்றி உள் வட்டத்தில் இலத்திரன்கள் இருப்பதால், அதிக மின்னழுத்த வாட்டமும், வலிமையான மின்புலமும் உள்ள இடத்தில் மட்டுமே நேர் மின்னிறக்கங்கள் உருவாக வாய்ப்புள்ளது. வெளி வட்டத்திலுள்ள நேர் அயனிகளால் உருவாக்கப்படும், இரண்டாம் கட்ட இலத்திரன்கள், அடுத்த கட்ட பேரிறங்கிகளை உருவாக்குகின்றன. எதிர் ஒளிவட்ட மின்னிறக்கம்பண்புகள்
இயங்கும் விதம்நேர் மின்னிறக்கங்களை விட எதிர் மின்னிறக்கங்கள் உருவாகும் விதம் சற்று சிக்கலானது. நேர் மின்னிறக்கங்கள் நேரடியாக இலத்திரன்களை உருவாக்கி அதன்மூலம் பேரிறங்களை உருவாக்குகிறது. கடத்திகளைச் சுற்றி உள் வட்டத்தில் அயனிகள் இருப்பதால், வெளிவட்டத்தில் உள்ள இலத்திரன்கள் அயனியாக்கல் மூலம் புதிய அயனிகளை உருவாக்குகிறது. இந்த அயனிகள் மூலம் உருவாகும் இரண்டாம் கட்ட இலத்திரன்கள் வெளிவிடும் ஒளியன்களால் பேரிறங்களை உருவாகிறது. எடுத்துக்காட்டுகள்
அதிகபட்ச மின்னழுத்த எல்லைமின்சாரத்தை கடத்தும் உயர் அழுத்தக் கம்பிகளில் ஒளிவட்ட மின்னிறக்கம் என்பது ஒரு இழப்பாகும். இந்த காரணத்தால் உயர் அழுத்தக் கம்பிகளில் அதிக மின்னழுத்தமும், குறைந்த மின்னோட்டமும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் I2R எனப்படும் வெப்ப இழப்பு தவிர்க்கப்படுகிறது. கம்பிகள் ஒளிவட்ட மின்னிறக்கத்தை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பார்க்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia