ஒழுங்குசார் நிரலாக்கம்ஒழுங்கு சார் நிரலாக்கம் (structured programming) என்பது நிரலி எழுதுகின்ற ஒரு முறையாகும். ஒரு நிரலியை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அவ்வாறு எழுதப் படும் நிரலிகள் படித்துப் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும். மேலும், அவற்றில் ஏதும் பிழைகள் இருக்குமாயின் அவற்றைக் கண்டறிந்து களைவது இன்னும் கடினமாகும். எனவே, ஒரு நிரலி எழுதும் போது, அதை மனம் போன போக்கில் எழுதாமல், ஒரு சில ஒழுக்க நெறிகளைக் கடைப் பிடித்து, கட்டுப்பாட்டோடு எழுதுதல் வேண்டும். அவ்வாறு எழுதும் போதுதான், நிரலிகள் ஒழுங்கு சார்ந்த அமைப்போடு கூடியவையாக உருவாகும். இவ்வாறு நிரலிகள் எழுதும் முறையை ஒழுங்கு சார் நிரலாக்கம் என்று டைக்ஸ்ட்ரா (Edsger W. Dijkstra) என்ற கணினி அறிஞர் கூறினார்.[1] ![]() ஒழுங்கு சார் நிரலிகள் எழுத, கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் போதுமென நிறுவப் பட்டது.[2]
இம் மூன்று கட்டுப்பாட்டு அமைப்புகளை வைத்துக் கொண்டு ஓர் ஒழுங்குசார் நிரலியை எழுதலாம். பிளாக்(P. J. Plauge), கனூத்(Donald Knuth) போன்றவர்கள் இந்தக் கருத்தை முழுதாக ஏற்றுக் கொள்ளவில்லை.[3][4] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia