ஓசுமியம் பெண்டாகார்பனைல்
ஓசுமியம் பெண்டாகார்பனைல் (Osmium pentacarbonyl) என்பது Os(CO)5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம ஓசுமியம் சேர்மமான இச்சேர்மம் ஓசுமியத்தின் எளிமையான தனிமைப்படுத்தக்கூடிய கார்பனைல் அணைவுச் சேர்மமாகக் கருதப்படுகிறது. ஓசுமியம் பெண்டாகார்பனைல் நிறமற்ற ஆவியாகும் திரவமாகும். 280-290 பாகை செல்சியசு வெப்பநிலையில் 200 வளிமண்டல அழுத்தத்தில் கார்பன் மோனாக்சைடின் கீழ் திண்ம டிரை ஓசுமியம் டோடெக்காகார்பனைலைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூகம் ஓசுமியம் பெண்டாகார்பனைல் உற்பத்தி செய்யப்படுகிறது. மாறாக, 200 வளிமண்டல அழுத்தத்தில் கார்பன் மோனாக்சைடின் கீழ் திண்ம டிரை ருத்தேனியம் டோடெக்காகார்பனைலைச் (Ru3(CO)12) சேர்த்து 160 ° செல்சியசு வெப்பநிலையில் Ru(CO)5 ஆக மாறுகிறது. .[1] வினைகள்![]() ஓசுமியம் பெண்டாகார்பனைல் மாதிரிகளை 80 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது மீண்டும் டிரை ஓசுமியம் கொத்துக்கு மாறுகிறது. Ru(CO)5 சேர்மத்தை மீண்டும் Ru3(CO)12 சேர்மமாக மாற்றுவது அறை வெப்பநிலையில் நிகழ்கிறது.[1] பெண்டாகார்பனைல் சேர்மத்தை குளோரினேற்றம் செய்தால் ஒரு நேர்மின் அயனி பெண்டாகார்பனைல் அணைவுச் சேர்மத்தை அளிக்கிறது:[1]
புற ஊதா கதிர்வீச்சின் போது, பெண்டாகார்பனைல் எக்சேன் கரைசல்கள் எத்திலீனுடன் வினைபுரிந்து மோனோ-, டை - மற்றும் டிரை என பதிலீடு செய்யப்பட்ட வழிப்பெறுதிகளைக் கொடுக்கின்றன:[3]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia