ஓடம்போக்கி ஆறு![]() ஓடம்போக்கியாறு (Odampokkiyaru) (இந்தியாவில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பாய்கிறது.[1] இந்த ஆற்றின் கரையில் திருக்கொள்ளம்புதூர் வில்வவனேசுவரர் சிவாலயம் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆறுகளில் மிகவும் முக்கியமான ஆறு ஓடம்போக்கியாறு ஆகும். காவிரி ஆற்றின் கிளையாறாக பிரிந்து, என்கண் என்னும் ஊரிலிருந்து தொடங்கி திருவாரூரின் மையப்பகுதி வழியாக ஆறு பயணிக்கிறது. ஆற்றின் மூலம் சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று வந்தன. திருவாரூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மிக முக்கியமான நீராதாரமாக விளங்கி வந்தது.[2] [3] பெயர்க்காரணம்இந்த ஆற்றின் பழைய பெயர் வெட்டாறு எனவும், பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றதாகவும், சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் சம்பந்தர் தீவிரமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே, ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறி, தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, "கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே' எனும் திருப்பதிகம் பாடியதாகவும், இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்து, திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பதும் வரலாறு. ஆகவே, இந்த ஆற்றை மக்கள் ஓடம்போக்கி ஆறு என்று அழைத்ததகாவும் தெரிகிறது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia