கஃப்சா மலை
கஃப்சா மலை (எபிரேயம்: הר הקפיצה அரபி: جبل القفزة, "ஜெபெல் அல் கஃப்சா", "பாய்ச்சல் மலை") என்பது, நசரேத்தின் தெற்கு எல்லைக்கு சற்று வெளியே, நவீன நகரத்தின் மையப் பகுதியில் இருந்து தெ.தெ.வ திசையில் 2.0 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இயேசுவைப் புறக்கணித்ததாக லூக்கா 4:29-30ல் குறிப்பிட்டுள்ள நிகழ்வு இவ்விடத்திலேயே இடம்பெற்றதாகப் பலர் நம்புகிறார்கள். நசரேத்தின் மக்கள், இயேசு ஒரு மீட்பர் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவரை மலையில் இருந்து தள்ளிவிட முயன்றனர். ஆனால் இயேசு அவர்களுக்கு இடையில் புகுந்து கடந்து சென்றுவிட்டார்."[1] இம்மலையில் உள்ள குகையொன்றில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் 100,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் மண்டையோடுகளும், எலும்புகளும் பிற எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டன. இங்கு காணப்பட்ட எலும்புக்கூடுகளுடன் மட்டும் சிவப்புக் காவிக்கற்கள் காணப்பட்டன. இது, புதை குழிகள் குறியீட்டுத் தன்மை கொண்டவையாக இருப்பதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னர், மனிதனுடைய குறியீட்டுக் காரண அறிவு பிற்காலத்தில், ஏறத்தாழ, 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியுற்றதாக அறிவியலாளர்கள் எண்ணினர்.[2] 20ம் நூற்றாண்டில் இம்மலை கற்கள் அகழிடமாக இருந்து இப்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. அஃபூலா, ஜெசுரீல் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களை நசரேத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலை 60, பழைய கல் அகழிடப் பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு சுரங்கப்பாதை ஊடாகச் செல்கிறது.[3] 2009ல் இசுரேலுக்கு வந்த பாப்பரசர் 16ம் பெனடிக்ட், மே 14 ஆம் தேதி இந்த மலையில் ஒரு வழிபாடொன்றை நடத்தினார். 40,000 மக்கள் இதில் கலந்துகொண்டனர்.[4]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia