கங்காபுரம்
கங்காபுரம் (ஆங்கிலம்: Gangapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 223 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கங்காபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°21′36″N 77°39′33″E / 11.360000°N 77.659300°E (அதாவது, 11°21'36.0"N, 77°39'33.5"E) ஆகும். ஈரோடு, நசியனூர், சித்தோடு மற்றும் பெருந்துறை ஆகியவை கங்காபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். கங்காபுரம் குளத்தினை மறுசீரமைப்பு செய்யும் பணிகளுக்கான மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.64 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[2] ஜவுளிப் பொருட்களுக்கான ஒருங்கிணைந்த சந்தையான டெக்ஸ்வேலி, கங்காபுரத்தில் அமையப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[3][4] இங்கு அமைந்துள்ள கங்காபுரம் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[5] கங்காபுரம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[6] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia