கசோல்
கசோல் (Kasol) என்பது வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம் ஆகும் [1][2]. பார்வதி ஆற்றின் கரையில் உள்ள பார்வதி பள்ளத்தாக்கில் மணிகரண் மற்றும் புண்டர் நகரங்களுக்கு நடுவில் இக்கிராமம் அமைந்திருக்கிறது. புண்டர் நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் மணிகரண் நகரத்திலிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவிலும் கசோல் கிராமம் அமைந்துள்ளது. காசோல் கிராமம் இமயமலையை ஏறிவருபவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கிடமாகும். மற்றும் மலானா மற்றும் கீர்கங்கா போன்ற மலையேற்ற கிராமங்களுக்கு அருகிலுள்ள ஒரு தளமாகவும் இக்கிராம் உள்ளது. கிராமத்தின் வலுவான யூத வரலாறு மற்றும் மரபுகள் காரணமாக கசோலை இந்தியாவின் குட்டி இசுரேல் என அழைப்பர் [3]. கசோல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கண்கவர் சுற்றுலா தலமாகும். குட்டி இசுரேல் போல இங்கு ஏராளமான இசுரேலிய சுற்றுலா பயணிகள் மற்றும் இப்ரூ சிற்றுண்டி விடுதிகள் காணப்படுகின்றன. கிராமம் முழுக்க எங்குபார்த்தாலும் நீண்ட தலைமுடி மக்கள் காணப்படுவதால் கசோல் கிராமத்தை குட்டி ஆம்சுடர்டாம் என்றும் அழைக்கின்றனர். ஆண்டு முழுவதும் கசோலில் நல்ல காலநிலை நிலவுகிறது. டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி வரையில் மிதமான பனிப்பொழிவு இங்கு நிலவுகிறது. கோப்பன்-கெய்கர் காலநிலை வகைப்பாட்டு திட்டத்தில் கசோலின் தட்பவெப்பநிலை ஈரப்பதமான மிதவெப்ப மண்டல தட்பவெப்பநிலை என்று வகைப்படுத்துகிறது[4]. கசோலில் பார்க்க வேண்டிய இடங்கள்l[5]
போக்குவரத்துகசோலை சென்றடைய பல்வேறு போக்குவரத்து வசதிகள் உள்ளன. முதலில் புண்டர் நகரத்திற்கு சென்றுவிட்டால் அங்கிருந்து மணிக்கு ஒரு வண்டியாக பேருந்துகள் கசோல் கிராமத்திற்கு செல்கின்றன. காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை இவ்வசதி உண்டு. இதைத்தவிர அனைத்து நேரத்திலும் தனியரின் உள்ளூர் வாடகை வண்டிகள் வசதியும் உண்டு. மணாலியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதியும் இருக்கிறது[6]. நேரடியாக விமானப் போக்குவரத்து சேவை கசோலுக்கு கிடையாது[7]. பண்டிகைகள்ஒவ்வோர் புத்தாண்டின் போதும் கசோல் இசைத் திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. படக் காட்சியகம்
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia