கஜினிகாந்த்

கஜினிகாந்த்
இயக்கம்சந்தோஷ் பி. ஜெயக்குமார்
தயாரிப்புகே. ஈ. ஞானவேல்ராஜா
கதைசந்தோஷ் பி. ஜெயக்குமார்
இசைபாலமுரளி பாலு
நடிப்புஆர்யா
சாயிஷா சைகல்
ஒளிப்பதிவுபாலு
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடு2018 ஆகத்து 3
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கஜினிகாந்த் (Ghajinikanth), சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் இயக்கத்தில், கே. ஈ. ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் வெளியானத் தமிழ்த்திரைப்படம் ஆகும். இப்படம் பலே பலை மகடிவாய் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் கதையைத் தழுவிய தமிழ்த்திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஆர்யா, சாயிஷா சைகல் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பல்லுவின் ஒளிப்பதிவிலும், பாலமுரளி பாலுவின் இசையிலும், பிரசன்னா ஜிகேவின் படத்தொகுப்பிலும் 2018 ஆகத்து 3 அன்று வெளியான திரைப்படம்.[1]

நடிப்பு

படப்பணிகள்

இத்திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் நவம்பர் 2017இல் இப்படம் கே. ஈ. ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் ஆர்யா, சாயிஷா சைகல் ஆகியோர் முன்னணிப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளாக அறிவித்தார்.[2][3] சென்னையில் படப்பிடிப்பு நடத்தியப்பின்னர் இப்படத்தில் பாடல்காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டன.[4] இப்படத்தின் படப்பணிகளுக்கிடையே இருட்டு அறையில் முரட்டுக்குத்து (2018) என்னும் படத்தினையும் இயக்கி வருகின்றார். இப்படத்தின் அறிமுக காட்சிப்படம் 12 திசம்பர் 2017இல் வெளியிடப்பட்டது.[5] கஜினிகாந்த் படத்தின் சுவரொட்டியில், நடிகர் ஆர்யா வேட்டியின்றி சட்டை, துண்டுடன், ஒரு கையில் பாரதியார் நூல், மறுகையில் தூக்குச்சட்டி என்னும் காட்சி தர்மத்தின் தலைவன் படத்தில் வந்த ரஜினியின் கதைப்பாத்திரத்தை நினைவுபடுத்துகின்றார்.[6]

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya