கடவூர் தேவாங்கு சரணாலயம்கடவூர் தேவாங்கு சரணாலயம் (Kaduvur Slender Loris Sanctuary) என்பது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் தேவாங்கு காப்பகம் ஆகும்.[1][2] தமிழக அரசு இதற்கான பூர்வாங்கப் பணிகளைத் துவக்கிட அரசாணை வெளியிட்டுள்ளது. இச்சரணாலயம் சுமார் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைய உள்ளது. தேவாங்குதேவாங்கு இரவாடி வகையினைச் சார்ந்த சிறிய வகைப் பாலூட்டி ஆகும். இது வேளாண் பகுதிகளில் காணப்படும் விவசாயத் தீங்குயிரிகளை வேட்டையாடி அழித்து விவசாயிகளுக்கு நன்மைப் பயக்கின்றது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இந்த விலங்கு அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[3][4] அமைவிடம்கடுவூர் தேவாங்கு சரணாலயம் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், திண்டுக்கல் கிழக்கு, நத்தம் வட்டங்களிலும் கரூர் மாவட்டத்தில் கடவூர் வட்டத்தினையும் உள்ளடக்கிய வனப்பகுதியில் அமைகின்றது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia