இயந்திரங்களின் தாய் என்று அழைக்கப்படும் கடைசல் இயந்திரம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திரம் ஆகும். கடைசல் இயந்திரம் மூலப்பொருளை உருளடிப்படை உருவத்திற்கு மாற்ற உதவுகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி மாட்ஸ்லே என்ற பொறியாளர் 1797-ஆம் ஆண்டு மரை வெட்டும் கடைசல் இயந்திரத்தை வடிவமைத்தார். இன்றைய நவீன கடைசல் இயந்திர வளர்ச்சிக்கு இவரது கண்டுபிடிப்பே அடிப்படை ஆகும்.[1][2][3]
வரலாறு
எண்
காலம்
இயக்கமுறை
1.
பண்டைக்காலம் (கி.மு.1300)
இருமனிதர்கள் (manual)
2.
இடைக்காலம் (கி.பி.1600)
வணரி (crank or pedal)
3.
தொழிற்புரட்சி (கி.பி.1900)
பொறி (engine)
4.
கி.பி.1920
மின்னோடி (motor)
5.
கி.பி.1950
பணிப்பியங்கி (servo mechanism)
உருவங்கள்
இவ்வெந்திரத்தில் செய்யக்கூடிய உருவங்கள்
உருளை (cylinder)
கூம்பு (cone)
கோளம், பந்து (sphere)
எந்திர வினைகள்
இதன் மூலம் செய்யக்கூடிய வினைகள்:
கடைதல் (turning)
முகக்கடைதல் (face turning)
கூம்புதல் (tapering)
துளையிடுதல் (drilling & boring)
மரையிடுதல் (threading)
பொளைதல் (knurling)
காடி எடுத்தல் (grooving)
மூலை மழுக்குதல் (chamfering or filleting)
சீராக்குதல் (finishing)
பாகங்கள்
தளம் (bed & base)
தலைப் பகுதி (head stock)- சுழலியை சுழற்றும் இயங்குகருவிகள் உள்ள பகுதி.