கடைசீல பிரியாணி
கடைசீல பிரியாணி (Kadaseela Biriyani) என்பது 2021ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான கருப்பு நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை நிஷாந்த் கலிதிண்டி என்பவர் இணைந்து எழுதி இயக்கியிருந்தார். நிஷாந்த் கலிதிண்டி அறிமுக இயக்கத்தில் உருவான இப்படம் 2018இல் நிறைவுற்ற போதிலும்,[1] அதன் திரையரங்கு வெளியீடு 19 நவம்பர் 2021 தான் நடந்தது. இந்த படத்தில் வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்றனர்.[2][3][4][5] படத்தில் மலையாள வசனங்களும் இடம்பெற்றுள்ளன. கதைமூன்று சகோதரர்கள் தங்கள் தந்தையின் மரணத்திற்கு பழிவாங்க உள்ளூர் நில உரிமையாளரின் ரப்பர் தோட்டத்திற்குள் நுழைகிறார்கள். ஆனால் நில உரிமையாளரின் வெறி பிடித்த மகனால் அவர்கள் எதிர்பார்க்கப்படுவதால் விதி கொடூரமான திட்டங்களைக் கொண்டுள்ளது.[6] நடிகர்கள்
விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஒலிப்பதிவுஇப்படத்திற்கு ஜூடா பால், நீல் செபாஸ்டியன் ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர். ஒலிப்பதிவுத் தொகுப்பில் உமாதேவி, சுஹைல் கோயா, தென்சின் ரங்டோல், பயல் ஜான் , சோலார் சாய் எழுதிய பாடல் வரிகளுடன் ஏழு பாடல்கள் இடம்பெற்றன. சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia