கணையெக்கி
ஒரு கணையெக்கி(Mortar)[சான்று தேவை] என்பது பொதுவாக ஒரு எளிய, இலகுவான, மனிதன் - காவக்கூடிய, முகவாய் தாணிக்கப்பட்ட, ஒரு சீர்குழல் (சில மாதிரிகள் ஒரு மரையிடப்பட்ட சுடுகுழல்களைப் பயன்படுத்தினாலும்) உலோகக் குழாய் அடித்தட்டுக்கு (பின்னுதைவை பரப்ப) பொருத்தப்பட்ட, ஒரு இலகுவான இருகால் மூட்டு(mount) மற்றும் ஒரு தொலைநோக்கி கொண்ட ஆயுதமாகும். அவை வெடிக்கும் எறிகணைகளை (தொழில்நுட்ப அடிப்படையில் வெடிகுண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன)[1] உயர்-வளைந்த எறிபடையியல் எறிபாதைகளில் செலுத்துகின்றன. கணையெக்கிகள் பொதுவாக பலவிதமான கணைகளுடன் நெருங்கிய ஆதரவுக்காக நேரடியில்லா சூட்டு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சொற்பிறப்பியல்
Mortar என்னும் ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லான கணையெக்கி என்பது இரண்டு சொற்களின் - கணை+எக்கி - கூட்டுச்சொல்லாகும். கணையெக்கியானது எறிகணைகளை எக்கி ஏவும் ஆற்றல் வாய்ந்தது. ஆதலால் 'எறிகணை' என்னும் சொல்லில் உள்ள 'கணை' என்னும் விகுதியையும் 'எக்குதல்' என்னும் சொல்லின் எக்கு என்னும் வினைவடிவினை எடுத்து அதனை இ விகுதியோடு புணர்த்தி எக்கி என்றாக்கி இரு சொற்களும் புணர்க்கப்பட்டுள்ளது. எக்குதல் என்னும் சொல்லுக்கு மேலே செல்ல வீசுதல்; உள்ளிழுத்தல்; தாக்கி ஊடுருவுதல் ஆகிய பொருட்கள் உள்ளன. இவை Mortar செய்யும் அத்தினை காரியத்தினையும் குறிக்கிறது. அதாவது கணையெக்கி என்னும் ஆய்தமானது எறியங்களை உயரத்திற்கு செலுத்துவதில்லை; மாறாக மிக குறுகிய தொலைவிற்கு மட்டுமே செலுத்துகிறது (கூடியது 4.5கி.மீ). மேலும் அது மனித வலு இல்லாமல் தானகவே எக்கி எறியத்தினை செலுத்துகிறது. அந்த எறிகணையனது எதனையும் தாக்கி ஊடறுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது. ஆகவேதான் இச்சொல்லானது mortar என்னும் ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்லாக வழங்கப்படுகிறது. வரலாறு![]() கணையெக்கிகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 1413 ஆம் ஆண்டு கொரிய கடற்சமரில் சுடுகலக் கொல்லர்கள் வான்'கு (சுண்டைக்காய் வடிவ கணையெக்கி) (완구, வான்கோ) உருவாக்கியபோது கொரியாவில் ஆரம்பகால கணையெக்கி பயன்படுத்தப்பட்டது.[2] வான்குவின் ஆரம்ப விருத்தி 1407.[3] ஆம் ஆண்டிற்கு முந்தையது. சோ மு-சீனின் (최무선) (1325–1395) மகனான சோய் ஹே-சான் (최 해산, குய் ஹைஷன்) (1380–1443) பொதுவாக வான்னினைப் புதுப்புனைந்த கிட்டிப்பைப் பெற்றவர். [6] இதன் முதல் பயன்பாடு மெகமதுவால் கொன்சுரான்டினோப்பிளின் 1453 முற்றுகையின் போது ஆகும். சியோவானி டா டாக்லியாகோசோவின் 1456 பெல்கிரேடின் முற்றுகையின்போது ஒட்டோமான் துருக்கியர்கள் ஏழு கணையெக்கிகளைப் பயன்படுத்தினர் என்றும், அவை "ஒரு இத்தாலிய மைல் உயரத்திற்கு கற்குண்டுகளை" சுட்டன என்றும் இது பற்றிய ஒரு இத்தாலிய கணக்கு கூறுகிறது.[4] இவற்றின் பறக்கும் நேரம் நீண்ட காலமாக இருந்ததால், இவற்றின் எறிபாதைகளைக் கண்காணிக்க நோக்கர்களை அமர்த்துவதன் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.[5] பம்ஃகார்ட் வான் சுரெய்ர் போன்ற ஆரம்பகால கணையெக்கிகள் பெரியதாகவும் கனமாகவும் இருந்தன, அவற்றை எளிதில் கொண்டு செல்ல முடியவில்லை. இந்த ஆயுதங்களின் வடிவமைப்பு சமையலறையை நினைவூட்டுகின்ற வகையில் இரும்புக் கிண்ணங்களின் வடிவத்தோடு இருந்தது மட்டுமல்லாமல் உரல் போன்றும் இருந்ததால் தோற்றத்தைக் கொண்டே அவற்றின் பெயர் எங்கிருந்து வந்தன என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. 1701[6][7] ஆம் ஆண்டில் பரோன் மென்னோ வான் கோஃகூர்ன் என்பவர் போக்குவரவிற்கு இலகுவான கணையெகியை புதுப்புனைந்தார். இந்த கணையெக்கி ஒரு வெடிக்கும் எறிகணையினை சுட்டது, அதில் சுடும் போது சூடான வாயுக்களால் எரியும் ஒரு உருகி இருந்தது. இந்த பொறிமுறையால் கோஃகார்ன் கணையெக்கி விரைவான புகழ் பெற்றது மட்டுமல்லாமல், 'வெடிகுண்டு கடற்கலம்' என்ற ஒரு புதிய வகைக் கடற்கலத்தின் உருவாக்கத்திற்கும் வித்திட்டது. ![]() மோரியாவை வெனிசு கைப்பற்றுவதில் கணையெக்கிகள் ஒரு முக்கிய பங்காற்றியிருந்தன, இந்த படை நடவடிக்கையின்போது, பார்த்தீனனில் ஒரு வெடிமருந்து கிடங்கு வெடித்தது. இந்த நடமாடும் கணையெக்கியானது களச் சேணேவிகளாக (முற்றுகை சேணேவிகளை விட) ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டது, பிரித்தானியப் படைகளால் கிளென் சீல் போரில் 1719 ஆம் ஆண்டு யாக்கோபியரின் எழிச்சியை அடக்குவதில்தான். இசுக்கொட்லாந்தின் மேற்கு உயர்நிலங்களின் கரடுமுரடான நிலப்பரப்பில் செந்தரமான களச் சுடுகலன்களை விட உயர் கோண எறிபாதை கணையெக்கிகள் பெரும் நன்மையைக் கொண்டிருந்தன. நெப்போலியன் ஊழியால் ஐரோப்பாவில் பொதுவான பயன்பாட்டில் இருந்து கணையெக்கிகள் வீழ்ச்சியடைந்தது, இருப்பினும் மன்பி கணையெக்கிகள் கடற்கரையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இடர்ப்பாட்டில் இருக்கும் கப்பல்களுக்கு வரிகளை(lines) எறியப் பயன்படுத்தப்பட்டன, மேலும் அவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் ஆர்வம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை புதுப்பிக்கப்படவில்லை. அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது இரு தரப்பினராலும் கணையெக்கிகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. விக்சுபர்க் முற்றுகையின்போது, நாயகம் இயுலிசசு கிராண்ட் "கிடைக்கக்கூடிய கடினமான மரத்தின் நடுகளை எடுத்து, ஆறு அல்லது பன்னிரெண்டு பவுண்டு எடையுள்ள எறிகணைகளுக்காக துளையிட்டு, அவற்றை வலுவான இரும்புப் பட்டைகளால் பிணைத்து கணையெக்கி உண்டாக்கப்பட்டது." என்று கணையெக்கி உண்டாக்கப்பட்ட விதம் பற்றி அறிக்கையிட்டர். "இவை கோஃகோர்ன்சு எனப்பட்டன, எறிகணைகள் இவற்றிடமிருந்து வெற்றிகரமாக எதிரியின் அகழிகளில் வீசப்பட்டன " என்றார் மேலும்.[8] ![]() உருசிய- சப்பானியப் போரின்போது, உருசிய பேரரசின் தரைப்படையின் லெப்டினன்ட் நாயகம்(Lieutenant General) இலியோனிட் கோபியாடோ, களத்தில் மூடிய சூட்டு நிலைகளில் இருந்து நேரடியில்லா சூட்டு நடத்தும் கொள்கையினைச் செயல்படுத்தினார், மேலும் நாயகம் உரோமன் கோண்ட்ராடென்கோவின் ஒத்துழைப்புடன், கடற்படை எறிகணைகளை வீசும் முதல் கணையெக்கியையும் வடிவமைத்தார். செருமன் தரைப்படை போர்ட் ஆர்தர் முற்றுகையை ஆய்வு செய்தது, அங்கு கனவகை சேணேவிகளால் முள்வேலி மற்றும் பதுங்கு குழிகள் போன்ற தற்காப்பு கட்டமைப்புகளை அழிக்க முடியவில்லை. இதன் விளைவாக, அவர்கள் மினென்வெர்ஃவர் r எனப்படும் குறுகிய-சுடுகுழல்படுத்தப்பட்ட மரையிடப்பட்ட முகவாய் தாணித்தல் கணையெக்கி ஒன்றை உருவாக்கினர். அஃது முதலாம் உலகப் போரின் போது பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அவை மூன்று அளவுகளில் உண்டாக்கப்பட்டிருந்தன; 7.58 செ.மீ (2.98 அங்குலம்), 17 செ.மீ (6.7 அங்குலம்) மற்றும் 25 செ.மீ (9.8 அங்குலம்). புத்தியல்வடிவமைப்பு![]() ![]() பெரும்பாலான நவீன கணையெக்கி முறைமைகள் நான்கு முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கின்றன: ஒரு சுடுகுழல், ஒரு அடித்தட்டு, ஒரு இருகால் மற்றும் தொலைநோக்கி. புத்தியல் கணையெக்கிகள் பொதுவாக 60 மிமீ (2.36 அங்குலம்) முதல் 120 மிமீ (4.72 அங்குலம்) வரையிலான குழல்விட்டம் கொண்டவையாக இருக்கும். இருப்பினும், பெரிய மற்றும் சிறிய புத்தியல் கணையெக்கி என்பது ஒரு முகவாய் தாணிக்கப்பட்ட ஆயுதம் மற்றும் இயங்குவதற்கு மிகவும் எளிமையானது ஆகும். இது ஒரு குழாயைக் கொண்டுள்ளது, அதில் சூட்டாளர்கள் ஒரு கணையெக்கி சுற்றை உள்விடுகிறார்கள். சுற்று குழாயின் அடியினை அடையும் போது அது அங்குள்ள நிலையான சுடுதல் முள்ளினை இடிக்கும். குழாய் பொதுவாக தரையில் 45 முதல் 85 டிகிரி கோணத்தில் அமைக்கப்படுகிறது, அதிக கோணம் குறுகிய கிடைமட்ட எறிபாதையை உருவாக்குகிறது. சில கணையெக்கிகள் நகரும் சுடுதல் முளினைக் கொண்டிருக்கின்றன, இது ஒரு பற்றுவடம் அல்லது விசைவில் பொறிமுறையால் இயக்கப்படுகிறது. கணைகள்கணையெக்கிகளுக்கான கணைககள் பொதுவாக இரண்டு முக்கிய வகைகளில் வருகின்றன: தூவி-நிலைப்படுத்தப்பட்டது(fin-stabilized) & சுழல்-நிலைப்படுத்தப்பட்டது(spin-stabilized). சில கணையெக்கி சுற்றுகள் எந்த மிகுதிப்படுத்திய எறிகணையும் இல்லாமல் சுடப்படலாம், எ.கா., 81 மிமீ எல் 16 கணையெக்கி.
கலைக்கூடம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia