கண்கட்டி விளையாட்டு

கண்கட்டி விளையாட்டு சிறுவர் சிறுமியரின் விளையாட்டுகளில் ஒன்று. இது தொடக்கப்பள்ளிகளில் விளையாடப்படும்போது மாணவர்கள் கைகோத்துக்கொண்டு நிற்கும் வட்டம் எல்லையாகப் பயன்படுத்தப்படும். தெருக்களில் விளையாடப்படும்போது கால்களால் தேய்த்து வரைந்த வட்டம் பயன்படுத்தப்படும்.

தொடுபவர் கண் கட்டப்பட்டிருக்கும். அவர் வட்டத்துக்குள் ஓடுபவர்களைத் தொடவேண்டும். தொடப்பட்டவர் கண் கட்டப்பட்டு ஆட்டம் தொடரும்.

இது விளையாடுவோர் அனைவருக்கும் இன்பம் பயக்கும்.

விளையாடும்போது உரையாடல் பாட்டுப் பாடப்படும்.

வேலியாகக் கைகோத்து நிற்பவர் கூட்டொலி கண் கட்டிக்கொண்டு தொடுபவர் இசைப்பாடல்
கட்டிலும் கட்டிலும் சேர்ந்ததா சேர்ந்தது
காராமணி பூத்ததா பூத்தது
வெட்டின கட்டை தழைத்ததா தழைத்தது
வேரில்லாக் கத்திரி காய்த்ததா காய்த்தது
கண்ணை இறுக்கிக்கோ இறுக்கினேன்

பார்க்க

தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

கருவிநூல்

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya