கண்டி இராச்சியம்
கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது. ஆட்சி முறைகண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அனைத்துத் துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான். அவன் இலங்கேசுவர, திரிசிங்கலாதீசுவர எனவும் அழைக்கப்பட்டான். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான். மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும், பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.[1] எல்லைகள்கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும், ஆறுகளாலும், காடுகளாலும், நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது. இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது. இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது. கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.
அரச சபைகண்டி இராச்சிய நிர்வாக முறையின் முக்கிய அலகாக அமைந்த அரச சபையில் கீழ்வரும் நிர்வாகிகள் அங்கம் பெற்றிருந்தனர்.
கண்டியை ஆண்ட அரசர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia