கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு (ஒலிப்பு) என்பது, உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளையோ, வழிமுறையையோ, தொழில் நுட்பத்தையோ குறிக்கும். ஒரு கண்டுபிடிப்பு, ஏற்கனவே இருந்த ஒரு வளர்ச்சியையோ, எண்ணக்கருவையோ அடிப்படையாகக் கொண்டும் அமையக் கூடும். பொதுவாகக் கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்வதற்கு, ஏற்கனவே இருக்கும் ஒரு எண்ணக்கருவையோ, வழிமுறையையோ மேம்படுத்தி ஒரு கண்டுபிடிப்பாக்க முடியும் என்ற புரிதல் இருப்பது அவசியம். சில சமயங்களில், மனித அறிவைப் பெருமளவுக்கு விரிவாக்கிய கண்டுபிடிப்புக்கள் எதிர்பாராத விதமாக நடைபெறுவதும் உண்டு.[1][2][3]

கண்டுபிடிப்பின் வழிமுறைகள்

மனித வரலாற்றில், ஒரு வேலையைப் புதிய முறையில், இலகுவாக, வேகமாக, அதிக செயற்றிறன் கொண்ட வகையில், அல்லது மலிவாகச் செய்து முடிக்கும் நோக்குடன் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற கருத்தை ஒரு பகுதியினர் முன்வைக்கின்றனர். இவர்கள், வளங்களின் பற்றாக்குறையே கண்டுபிடிப்புக்களுக்கு வழி கோலுகிறது என்று வாதிடுகின்றனர். இன்னொரு பகுதியினர், மேலதிக வளங்களே கண்டுபிடிப்பை ஊக்குவிக்கின்றன என்கின்றனர். எனினும், உண்மை நிலையை, இவற்றில் ஏதாவதொன்றின் அடிப்படையில் மட்டும் புரிந்துகொள்ள முடியாது.

எண்ணக்கருக்களும் கண்டுபிடிப்பும்

எண்ணக்கருக்களிலிருந்து (Ideas), பயனுள்ள பொருட்களையோ, ஒரு வழிமுறையையோ புதிதாக உருவாக்கிக் கொள்ள முடியும் ஆயினும், ஒரு மூல எண்ணக்கருவை, முழுமையான நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்பாக மாற்றுவதென்பது எப்பொழுதும் முழுமையாக நடைபெறக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் எண்ணக்கருக்கள் பல சமயங்களில் இயல்புக்குப் பொருத்தமற்றவை ஆகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையுமாக இருக்கின்றன. ஆகாயக் கோட்டை கட்டுதல் போன்ற சூழ்நிலைகள், ஆக்கத்திறனை (creativity) வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கக்கூடும் எனினும், நடைமுறைச் சிக்கல்களால் இவை கண்டுபிடிப்புக்களாக மாறுவதில்லை. கண்டுபிடிப்பின் வரலாறு இத்தகைய பல ஆகாயக் கோட்டைகளைக் கண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. inventor. Dictionary.com. Retrieved 1 October 2017.
  2. invent பரணிடப்பட்டது 2008-01-15 at the வந்தவழி இயந்திரம். Merriam-Webster. Retrieved 1 October 2017.
  3. *Inventor. Encyclopædia Britannica. Retrieved 1 October 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya