கண்ணே கலைமானே
கண்ணே கலைமானே (Kanne Kalaimaane) ஒரு இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை சீனு இராமசாமி எழுதி இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜியண்ட் மூவீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கான பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கப்பட்டு 45 நாட்களில் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இத்திரைப்படம் தமன்னாவின் ஒட்டுமொத்த 50 ஆம் திரைப்படமும், தமிழில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த 23 ஆவது திரைப்படமும் ஆகும். இத்திரைப்படம் பொதுவாக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.[3] நடிப்பு
தயாரிப்புசீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான தர்மதுரை வணிகரீதியான வெற்றியைத் தொடர்ந்து[4] விஜய் சேதுபதி கண்ணே கலைமானே என்ற பெயரை அறிவிக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் இணைய, தர்மதுரையின் கதாநாயகியான தமன்னா இத்திரைப்படத்திலும் கதாநாயகியாக இணைய திரைப்படத்தின் பணிகள் தொடங்கின.[5] இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் முன்னாள் மாணவரான ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார்.[6] இத்திரைப்படத்தின் படத்தொகுப்பினை மேற்கொள்ள காசி விஸ்வநாதன் ஒப்பந்தமானார். மதுரைக்கு அருகில் உள்ள பசுமையான கிராமங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2018 இல் தொடங்கியது.[7] திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடந்து மார்ச் 14, 2018 இல் நிறைவடைந்தது. படத்தின் தலைப்பான ‘கண்ணே கலைமானே’ என்ற வார்த்தைகள் 1982 ஆம் ஆண்டில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்து பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான மூன்றாம் பிறை திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில், கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பெற்ற பாடலின் முதல் வார்த்தைகள் ஆகும். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia