கண் கண்ட தெய்வம்
கண் கண்ட தெய்வம் (Kan Kanda Deivam) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பைய்யா, பத்மினி, நாகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இத்திரைப்படம் 15 செப்டம்பர் 1967 இல் வெளியிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் பாந்தவியாலு (1968) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்புகமல் பிரதர்ஸ் தயாரிப்பில்[4] கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.சம்பத்தும், படத்தொகுப்பாளராக ஆர்.தேவன் இருந்தனர். படத்தின் சில பாடல் காட்சிகள் விவசாயப் பின்னணியில் படமாக்கப்பட்டது. படத்தின் நீளம் 4845 மீட்டர் இருந்தது. இசையமைப்புஉடுமலை நாராயண கவி மற்றும் வாலியின் வரிகளுக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]
வெளியீடும் வரவேற்பும்கண் கண்ட தெய்வம் திரைப்படம் 1967 செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது. ஜெய் மாருதி கம்பைன்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia