கதை ஒன்றை பாடலாக பாடுகின்ற மரபிலமைந்த பாடல்கள் கதைப்பாடல்கள் எனப்படும். கதைப் பாடல் என்பது நாட்டாறியல் பாடல்களில் ஒருவகையாகும். இவை பாடல்களால் ஒரு கதையினை கூறுபவையாக அமைந்துள்ளன.
[1]
நா. வானமாமலை கதைபாடலை நான்கு வகையாக குறிப்பிட்டு, நாலாவதாக கிராம தேவதைகளின் கதைப்பாடல்கள் என்பதையும் இணைத்துக் கொள்கிறார்.
வரலாறு கதைப்பாடல்
கொள்ளையர் கதைப்பாடல் என்பது கதைப்பாடல்களில் கொள்ளையர்களை கதைதலைவனாக கொண்ட பாடல்கள். இவை மக்களுக்கு வீரமான கொள்ளையர்கள் கதையை விவரித்தன. பெரிய பண்ணையார்கள், செல்வந்தர்களிடம் கொள்ளைடித்து மக்களுக்கு நன்மை செய்த மனிதர்களை இப்பாடல்கள் புகழ்ந்தன.
நாட்டார் கதைப்பாடல்களில் கொடுரமான கொலைகளுக்காக எழுதப்பட்ட பாடல்களை கொலைச் சிந்து வகையில் சேர்க்கின்றனர். தகாதப் புணர்ச்சி, கள்ளக் காதல், குடும்ப வன்முறை போன்ற காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகள் கதைகளமாக கொள்ளப்படுகின்றன