கத்தரீன் ஹவார்ட்
கேத்தரீன் ஹவார்டு (Catherine Howard, அண். 1523 – 13 பெப்ரவரி 1542)[1] இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரின் ஐந்தாவது மனைவியாக 1540 முதல் 1541 வரை இங்கிலாந்தின் அரசியாக இருந்தவர். இவர் எட்மண்ட் ஹவார்ட் பிரபு, ஜோயிசு கல்பெபெர் ஆகியோரின் மகளும், எட்டாம் என்றி மன்னரின் இரண்டாம் மனைவி ஆன் பொலினின் உடன்பிறவா சகோதரியும், நோர்போக் கோமகன் தோமசு ஹவார்டின் மருமகளும் ஆவார். என்றியின் அரசவையில் தோமசு ஹவார்ட் ஒரு முக்கிய அரசியல் புள்ளியாக இருந்து வந்தார். இவரது செல்வாக்கினால், என்றியின் நான்காவது மனைவியான கிளீவ்சின் ஆனின் வீட்டில் கேத்தரீன் தங்க இடம் கிடைத்தது.[2] இதன் மூலம் கேத்தரீன் மன்னரினால் ஈர்க்கப்பட்டார்.[3] ஆனுடனான மணமுறிவை அடுத்து கேத்தரீன் 1540 சூலை 28 இல் என்றியை ஓட்லண்ட்சு அரண்மனையில் மணம் புரிந்தார். மன்னருக்கு அப்போது அகவை 49 ஆகும், கேத்தரீனின் அகவை 16 அல்லது 17 ஆகும்.[4] 1541 நவம்பரில், கத்தரின் ராணி என்ற பட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது உறவினர் தாமசு கல்பெப்பருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக[5][6][7] தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[8]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia