கத்திக்கட்டு சேவல் சண்டைகத்திக்கட்டு சேவல் சண்டை என்பது சேவல் சண்டை வகைகளில் ஒன்றாகும்.[1] இதனை கத்திக் கால் சேவல் சண்டை, கத்திக்கட்டு என்றும் அழைப்பர். இந்த சண்டைக்காக அசில் எனப்படும் பெறுவிடை கோழி ரகங்களில் கத்திக்கால் கோழிகள் என்றொரு தனி வகை உள்ளது. இந்தக் கோழிகள் பொதுவாக அதிக உயரம் பறக்கும் திறன் கொண்டவையாக உள்ளன. பெயர்க்காரணம்இந்த முறையில் சண்டையிட்டுக் கொள்ளும் சேவல்களின் கால்களில் இதற்கென தயாரிக்கப்பட்ட கத்திகள் கட்டப்படுகின்றன. சேவல்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது கத்தி கட்டப்படுவதால் "கத்திக்கட்டு" என்று அழைக்கப்படுகிறது. இதனை "சேவற்கட்டு" என்றும் அழைப்பார்கள். சேவல் வகைகள்கத்திக்கட்டு சேவல்களின் பெயர்கள், சேவல்களின் உடலிலுள்ள பொங்கு என்று அழைக்கப்படும் இறகுகளின் நிறத்தினைக் கொண்டு அறியப்படுகின்றன. பொதுவாக பஞ்சபட்சி சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றன ஐந்து பறவைகளின் பெயர்கள் சேவல்களுக்கு வழங்கப்படுகின்றன. அவையாவன,.
இவையின்றி கீரி, பேடு, சித்திரப்புள்ளி போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. [2] நிறங்களின் அடிப்படையில்பட்சிகளின் அடிப்படையில் பெயர்கள் அழைக்கப்படுவதோடு, நிறங்களைக் கொண்டும் மேலும் வகைப்படுத்தப்படுகின்றன.
தயார் செய்தல்சண்டைக்காக சேவல் குஞ்சுகள் வர்க்கம், வளர்ப்பு ஆகிய முறைகளில் தேர்வு செய்யப்படுகின்றன. சேவல் சண்டையில் வென்ற சேவல்களின் குஞ்சுகளில் வளர்க்கப்படுகின்றன. ஒரு வயதுடைய சேவல்களை பட்டா என அழைக்கின்றனர். அவைகள் தரம் பார்க்கப்பட்டு கட்டுத்தரை எனப்படும் இடத்தில் கட்டப்படுகின்றன. இவ்வாறு கட்டி வளர்க்கப்படுகின்றன சேவல் "கட்டுசேவல்" எனப்படுகின்றன. சோளம், கம்பு போன்ற தானியங்கள் கொடுத்து வளர்க்கப்படுகின்றன. சேவலின் உடலை உறுதி செய்ய நடைபயிற்சி, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சண்டை விதிமுறைகள்
அரசு விதிமுறைகள்
சண்டை நடைபெறும் புகழ்பெற்ற இடங்கள்
இலக்கியங்களில் கத்திக்கட்டு"கற்பனை சேவல்" எனும் சிறுகதை எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் கத்திக்கட்டு சேவலை வளர்க்கும் நபருக்கும் சேவலுக்குமான உறவும், குடும்பத்தில் ஏற்படுகின்ற சச்சரவுகளும் இடம்பெற்றுள்ளன. விமர்சனங்கள்கத்திக்கட்டு சண்டையின் போது சேவல்களின் காலில் கத்தி கட்டப்படுவதால் சேவல்கள் காயப்படுவதும், இறப்பதும் நடைபெறுகிறது. இதனால் விலங்கு நல ஆர்வலர்கள் கத்திக்கொண்டு சேவல் சண்டைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
புகைப்பட தொகுப்பு
இவற்றையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia