கந்தமாதன பருவதம்![]() இராமர் பாதம் அல்லது கந்த மாதன பர்வதம் என்ற மணல் குன்று இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்திற்கு வடக்கில் 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது. இராமர் கடலைக் கடந்து இலங்கை செல்லுமுன், இங்குள்ள குன்றில் தங்கினார் என்று தல புராணம் கூறுகிறது. இக்குன்றின்மேல் அமைந்துள்ள மண்டபத்தில் ஸ்ரீராமரின் பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் அமைந்துள்ளது. இக்குன்றில்தான் இராமர் பாதம் அமைந்துள்ளது. [1]. இராமர் பாதம் சன்னதிக்கு எதிரில் கருடனுக்கு சிறு சன்னதி அமைந்துள்ளது. இத்தீவில் உள்ள தொலைதொடர்பு கோபுரம் தவிர்த்து இதுதான் உயரமான பகுதி என்பதால் தீவு முழுமையையும் இங்கிருந்து காண முடியும். இங்குள்ள கோயிலில் இருக்கும் சக்கர வடிவின் மீதிருக்கும் பாதத்தடங்கள் இராமருடையவை என்று நம்பப்படுகிறது. எனவே இவ்விடம் பொதுவாக ‘இராமர் பாதம்’ என அழைக்கப்படுகிறது[2]. மாசி சிவராத்திரி திருவிழாவின்போது ராமேஸ்வரம் கோயிலிலிருந்து ராமநாத சுவாமியும் பர்வதவர்த்தினி அம்மனும் இங்குள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளும் வழக்கம் உள்ளது. [3]. கந்தமாதன பருவதங்கள்கந்தமாதன பருவதம் என்ற மலை பல தொன்மங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் பெயரில் பல மலைகள் இருந்திருக்கலாம். பாம்பன் தீவில் உள்ள தொலைதொடர்பு கோபுரம் தவிர்த்து அங்கு கந்தமாதன பருவதம் என்று அழைக்கபடும் பகுதியே உயரமான பகுதி ஆகும். தீவு முழுமையையும் இங்கிருந்து காண முடியும். இங்குள்ள கோயிலில் இருக்கும் சக்கர வடிவின் மீதிருக்கும் பாதத்தடங்கள் இராமருடையவை என்று நம்பப்படுகிறது. எனவே இவ்விடம் பொதுவாக ‘இராமர் பாதம்’ என அழைக்கப்படுகிறது[4] திருச்செந்தூர் முருகன் கோயில் ‘சந்தனமலை’ என்னும் குன்றின் மீதே அமைந்திருப்பதாகவும் எனவே கந்தமாதன பர்வதம் என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டென்றும் சொல்லப்படுகிறது. [5]. கந்தமாதன மலை மகாபாரதத்திலும், இராமாயணத்திலும், புத்த ஜாதகக் கதைகளிலும், பல்வேறு புராணக் கதைகளிலும் முனிவர்கள் தங்கி தவமியற்றும் இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[6]. இந்த மலையின் பெயருக்கும் நாற்றத்துக்கும் தங்க நிறத்துக்கும் தொடர்புள்ளதாகத் தெரிகிறது[7][8]. கந்தமாதன மலை இடம்பெற்றுள்ள ஒரு புராணக்காட்சியின் புடைப்புச் சிற்பம் திருக்குறுங்குடியில் உள்ளது.[9] கந்தமாதன மலை தமிழிலக்கியத்தில் கம்ப ராமாயணம், திருநாவுக்கரசர் தேவாரம், கச்சியப்ப முனிவரின் தணிகைப் புராணம் உள்ளிட்ட பலவற்றில் இடம்பெற்றுள்ளது [10][11]. கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்தில் இம்மலை மேருமலைக்குத் தென்புறத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது[12]. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia