கந்தரோடை தொல்லியல் களம்

கந்தரோடை என்று அழைக்கப்படும் ஊர் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுத் தன்மை கொண்டுள்ளது. அதாவது கிறிஸ்துவுக்கு முன் 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை உடையது என்று ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்."யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொல்லியல் களங்களுல் மிகவும் பழைமை வாய்ந்தது மட்டும் இன்றி மிக பிரசித்தி பெற்றதும் இந்த கந்தரோடை தொல்லியல் களம். (இந்திரபாலா 2006,105) அண்மையில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங்கல் அம்மி ஒன்று இங்கு கண்டெக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது. (வீரகேசரி 25.06.2013) இது ஒரு பெருநகரமாக இருந்தது என்றும் வியாபார முக்கிய நிலையமென்ற வகையில் சர்வதேச நாமத்தை கொண்டிருந்தது (பத்மநாதன் 2011, 3) அதுமட்டுமன்றி, பௌத்த சமயம் இங்கு மலர முன்னர் தமிழர் பண்பாடு நிலவியதாகவும்கூறப்படுகின்றது.ரோமாபுரி,சீனா,சேர,சோழ,பாண்டிய,பல்லவ,சிங்கள அரசு கந்தரோடையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுருந்தமைக்கான சான்றுகளையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அவை பற்றிய கட்டுரைகள் ஆங்கில,சிங்கள ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளன.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya