கந்தளாய் அணை
கந்தளாய் அணை (Kantale Dam) இலங்கை கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கட்டுக்கரை அணையாகும். இது வேளாண்மைக்காக நீரைத்தேக்க உதவுகிறது. இது 14,000 அடி (4,267 மீட்டர்) நீளமும், 50 அடி (15 மீட்டர்) உயரமும் கொண்டது. 1986 ஏப்ரல் 20 ஆம் தேதி இந்த அணை உடைந்து உயிர்ச்சேதம் உட்படப் பெரும் சேதங்களை விளைவித்தது. பேராற்றை மறித்துக் கட்டப்பட்டுள்ள இந்த அணை ஆற்று நீரின் பெரும்பகுதியைத் தேக்கி வைத்துக்கொள்வதால் வெளியேறுப்போது இது சிறிய ஆறாகத் திருகோணமலை துறைமுகப் பகுதியில் கடலை அடைகிறது. 1986 அணை உடைப்பு1986 ஏப்ரல் 20 அதிகாலை 3.00 மணிக்கு அணை உடைத்துக்கொண்டது. குளத்து நீர் ஒரு சுவர்போல தாழ்ந்த பகுதிகளில் உள்ள ஊர்களுக்குள் புகுந்தது. ஏறத்தாழ 120-180 வரையிலானோர் இறந்தனர்[1]. 1600 வீடுகள் சேதமாயின. 2000 ஏக்கர் நெற்பயிர் அழிந்துபோனது. 8,000 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. மிகவும் பாரமான வண்டிகள் அணையின் மீது போக்குவரத்துச் செய்தமை அணை உடைந்ததற்கான காரணங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.[2][3][4]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia