கனடியப் பழங்குடி மக்கள்
கனடாவின் பழங்குடி மக்கள் என்பது ஐரோப்பியர்கள் கனடாவிற்கு குடியேற வர முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வாழ்ந்த மக்கள் ஆவர். இவர்கள் பல நாடுகளைக் சார்ந்தவர்களாக, பல மொழிகளை, பண்பாடுகளை, தொழில்நுட்பங்களை, சமூகப் பொருளாதார முறைமைகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இன்று இவர்கள் முதற் குடிமக்கள், இனுவிட், மேட்டிசு மூன்று வகையா அடையாளம் படுத்தப்படுகிறார்கள். 2006 புள்ளிவிபரங்களின் படி, கனடாவின் மொத்த சனத்தொகையில் 1,172,790 அல்லது 3.8% விழுக்காட்டு மக்கள் பழங்குடிகள் ஆவர். இதில் 600 தனித்துவமான முதற்குடி அரசுகள், அவர்களின் தனித்துவமான பண்பாடு, மொழி, கலைகளோடு இருக்கிறார்கள். முதலில் வந்த ஐரோப்பியர்கள் இந்தக் குளிர் தேசத்தில் எவ்வாறு தப்பிப் பிழைத்தல் என்பதை பழங்குடி மக்களிடம் இருந்தே கற்றுக் கொண்டார்கள். எனினும் தொடர்ந்த ஐரோப்பியர்களின் குடியேற்றமும் ஆதிக்கமும் இவர்களின் மக்கள் தொகையையும் வாழ்வியலையும் சிதைத்தது. ஐரோப்பியர் வந்தபோது தனிச் சொத்துரிமை என்ற கருத்துருவையே கொண்டிருக்காத இந்த மக்களிடம் இருந்து பெரும் நிலப் பகுதிகளை மிகக் சொற்ப விலைக்கு வாங்கினர். ஐரோப்பியர்களை இவர்கள் எதிர்த்தார்கள் என்றாலும், தொழில்நுட்பத்திலும் ஒழுங்கமைப்பிலும் மேம்பட்டு இருந்த ஐரோப்பியர்கள் இவர்களை வெற்றி கொண்டார்கள். பண்பாட்டு assimilation கொள்கையை வலியுறுத்திய ஐரோப்பிய கனேடிய அரசுகளால் இவர்களில் கணிசமான பகுதியினர் கட்டாயமாக கிறித்தவ சமயத்துக்கு மதம் மாற்றப்பட்டார்கள், கிறித்தவ கல்லூரிகளில் கட்டாயப் கல்வி பெற்றார்கள். இவர்களின் வாழ்வியல் பொருளாதார மூலங்கள் சிதைக்கப்பட்டதால் இவர்கள் கனேடிய அரசைத் தங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதனையும் காண்க
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia