கன்சால் கிராமம்

கன்சால் கிராமம் (Kansal Village) எனும் இந்த சிறிய கிராமம், இந்திய பஞ்சாப் பிராந்தியத்தின் பஞ்சாப், அரியானா எனும் இரு மாகாண இடை தலைநகர் சண்டிகர் எல்லையில் அமைந்துள்ளது. (அமைவிடம்: 30 ° 45'43 "வ 76 ° 48'55"கி)[1] சண்டிகரின் யூனியன் நிர்வாகம், இந்த பகுதியை பஞ்சாப் மாநிலத்திடமிருந்து குத்தகைக்கு தத்தெடுத்து எடுத்து பராமரித்து வருவதாக அறியப்பட்டது. மேலும் இந்த சிற்றூர் அருகில் கன்சால் வனம் எனும் இயற்கைக்கானகம் அமைந்துள்ளது. இக்கானகத்தில் கழுதைப்புலி, கலைமான், நில்கை மான், நரி மற்றும் முயல் போன்ற விலங்குகள் வசிக்கின்றன.[2]

கன்சாலில் உள்ள அந்த வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை என்றாலும், அதிக ஆர்வமுள்ள இயற்கை ரசிகர்கள் சண்டிகர் வனப்பாதுகாப்பு அதிகாரியிடன் விசேட அனுமதி பெற்று இக்காட்டில் சுற்றுலா மேற்கொள்கிறார்கள். மேலும் இவ் வனப்பகுதியில் ஒரு விருந்தினர் இல்லமும், இதனைச்சுற்றி ரம்மியமான புல்வெளிகள் மற்றும் பல்வகை மலர்த்தாவரங்கள் போன்றவை காட்சியளிக்கின்றன.[2]

சான்றாதாரங்கள்

  1. wikimapia.org | Kansal | village | வலைக்காணல்:20/07/2016
  2. 2.0 2.1 "Kansal, Chandigarh". www.nativeplanet.com (ஆங்கிலம்). 2013–16. Retrieved 2016-07-19.{{cite web}}: CS1 maint: date format (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya