கன்னிமாரா பொது நூலகம்
சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் (Connemara Public Library) இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். ஆதலால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பெறப்படும். 1890-இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இஃது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது. இந்நூலகம் காலை 8 முதல் இரவு 8 மணிவரை செயல்படுகிறது.[1] வரலாறுகன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-இல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிசு இந்தியப் பேரரசின், மதராஸ் மாகாணத்தின் மதராஸ் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகச் சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் தொடங்கப்பட்டது.[2] இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராஸ் மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை, மதராஸ் அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன. பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. இந்த நூலகம் திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது. 1948-ஆம் ஆண்டு மதராஸ் பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன்முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிருவகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமாரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று.[3] கட்டமைப்புக் கலைகளின் ஒருங்குமையைக் குறிக்குமாறு அமைந்த கட்டடங்களோடு 1973-இல் மேலும் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இவற்றில், வார இதழ்கள்-நாளிதழ்கள் பிரிவு, பாடப்புத்தகப் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, வேற்றுமொழி இலக்கியங்கள் பிரிவு, காணொளி பிரிவு ஆகியவற்றோடு இந்திய ஆட்சிப் பணி தேர்வு ஆயத்தத்துக்கான தனித்துவ பிரிவு ஆகியவை இருக்கின்றன. நூலகம் முழுமைக்கும் கணினிமயப்படுத்தல் முடிவுறும் தறுவாயில் உள்ளது. இங்கு மொத்தம் ஆறு இலட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் உள்ளன. 1981-ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் ஆணைப்படி கன்னிமாரா பொது நூலகம் நாட்டின் களஞ்சிய நூலகமானது.[4] நாட்டில் மொத்தம் நான்கு களஞ்சிய நூலகங்கள் உள்ளன. எனினும் கன்னிமாரா பொது நூலகம், நூலக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பில் பதிவுபெற்ற உறுப்பினராக இல்லை.[5] நூலகர்கள்
வெளி இணைப்புகள்
மேலும் பார்க்கஉசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia