கன்னியாகுமரி (புதினம்)
'கன்னியாகுமரி' எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதப்பட்ட புதினம். இது மலையாள சினிமா உலகினையும் ஒர் கலைஞனின் மனவெழுச்சி,உணர்வுகள் என்பனவற்றையும் மையப்படுத்தி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியினை கதைகளமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம்கதையின் நாயகன் ரவி சொல்லிக் கொள்ளும்படியாக, ஒரு திரைக் காவியம் படைத்த ஒரு சினிமா இயக்குநர். அதன் பின்னர் வெளிவந்த அவன் படைப்புகள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையாததால், தன் விருப்பதிற்குரிய இடமான கன்னியாகுமரிக்கு வருகிறான், மீண்டும் ஒரு நல்ல படைப்புக்கான ஒரு கதை அமையும் என்ற நம்பிக்கையில். வந்த இடத்தில், அவன் தன் முன்னாள் காதலி விமலாவினை கண்டுகொள்கிறான். அவன் நினைவில், அவளை மூன்று பேர் வண்புணர்ந்தது ஆகியவை வந்து போகின்றன. அவன் தூக்கம் கூட இதனால் சிரமமாகின்றது. இவற்றிலிருந்து மீள அவன் பிரவீணா என்ற நடிகையின் துணை நாடுகின்றான். இங்கும் அவனுக்கு பிரச்சனை. பிரவீணா குறித்தான எண்ணங்கள் அவனை சிறுமை கொள்ள செய்கிறது. பல்வேறு சூழ்நிலைகளில், ஒவ்வொரு முறையும் அவளிடம் தோற்கிறான். இதனால் அவளை வெறுக்கிறான், இருந்தபோதிலும் அவளை அவன் நேசிக்கிறான். இந்த ஊசலாட்டங்களுக்கு இடையே அவன் தன் கனவு படைப்புக்கான கதையை தேடி அலைகிறான். கடைசி வரை ஒரு நல்ல கதைக்கான கருவை தீர்மானிக்க முடியாமல் திணறுகிறான். அவனை சுற்றியுள்ள அனைவரும் அவனை தனியே விட்டு விலகுகின்றனர்.அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படுகின்றதா என்பதே நாவலின் முடிவாகும். விமர்சனங்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia