கபர்து மக்கள்
கபர்து மக்கள், வடக்குக் காக்கேசஸ் பகுதியில் வாழும் மக்கள் இனத்தோராவர். இவர்கள் தமது இனத்தின் பன்மைப் பெயரான கபார்தீன் என்பதால் பெரும்பாலும் அறியப்படுகிறார்கள். தொடக்கத்தில் அடிகே பழங்குடியின் அரை-நாடோடிக் கிழக்குப் பிரிவினராக இருந்தனர். இவர்கள் இப்போதும் தங்களை அடிகே பழங்குடியினராகவே கருதிவருகின்றனர். 2002 ஆம் ஆண்டுக் கணக்குப்படி ரஷ்யாவில் இவர்களுடைய மக்கள்தொகை சுமார் 520,000 ஆகும். துருக்கி, ஜோர்ஜியா ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இவ்வினத்தவர் வாழ்ந்து வருகின்றனர்.[1][2][3] பெரும்பாலான கபர்துக்கள், சுன்னி முஸ்லிம்கள் ஆவர். எனினும், வட ஒசெட்டியாவின் மொஸ்டொக் மாவட்டத்தில் வாழும் கபர்துக்கள், பழமைவாத கிறிஸ்தவர்களாவர். இவர்கள், காக்கேசிய மொழிக்குடும்பத்தின், கிழக்கு எல்லையில் உள்ள வடமேற்குக் காக்கேசிய மொழிக்குழுவைச் சேர்ந்த கபர்திய மொழியைப் பேசுகிறார்கள். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia