கபிலநெடுநகர்கபிலநெடுநகர் என்று காமதேனு என்னும் கபிலை இருக்கும் வானுலகம். இது ஒரு கற்பனை உலகம். வேந்தர்க்கு மணம்முடித்துத் தர மறுக்கப்பட்ட பெண் ஒருத்தியின் கூந்தல் அகில்-புகை ஊட்டப்பட்டு அதன் மணம் கபிலநெடுநகர் வரையில் கமழ்ந்ததாம்.[1] புத்தர் பிறந்த கபிவாஸ்து நகரை மணிமேகலை என்னும் நூல் கபிலையம்பதி என்று குறிப்பிடுகிறது. மகத நன்னாட்டுக்குத் திலகம் போல் இது விளங்கியதாம் [2] கபிலை என்னும் சொல் பசுவைக் குறிக்கும். புறத்திணைக்கு உரிய துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் கபிலை கண்ணிய புண்ணிய நிலையைக் குறிப்பிடுகிறது. [3] பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் தலைவனாகப் புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்பவரால் பாராட்டப்பட்ட ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்திலிருந்து தான் கைப்பற்றிக்கோண்டு வந்த வருடை ஆடுகளைத் தன் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து பார்ப்பார்க்குக் கொடுத்தான். அத்துடன் குடநாட்டில் இருந்த கபிலை என்னும் ஊரையும் கொடுத்தான். இப்படிக் கொடுத்ததால் இவன் வானவரம்பன் என்னும் சிறப்பினைப் பெற்றான். [4] சான்று மேற்கோள் |
Portal di Ensiklopedia Dunia