கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல்
கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் (ஆங்கிலம்: Gamaleya Research Institute of Epidemiology and Microbiology) இதன் தலைமையிடம் உருசியாவின் மாஸ்கோ வில் அமைந்துள்ளது. தற்போது உருசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 1891 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் ரஷ்யாவில் நுண்ணுயிரியல் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னோடியாக அறியப்படுகிறது.[3][4] வரலாறு1891 ஆம் ஆண்டில் ஒரு தனியார் இரசாயன நுண்ணோக்கி மற்றும் பாக்டீரியா அமைச்சரவையாக நிறுவப்பட்டது, பின்னர் வேதியியல் பாக்டீரியாவியல் ஒரு தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது எப்.எம் புளூமெண்டல். இந்த நிறுவனத்தை 1919 இல் தேசியமயமாக்கப்பட்டது. ஆராய்ச்சிகள்இபோலா தீநுண்ம நோய்மே 2017 ஆம் ஆண்டு இந் நிறுவனம் இபோலாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்தது. அதன் பெயர் கேம்இவாக்-காம்பி (GamEvac-Combi) 1000 தடுப்பூசிகளை கினியாவிற்கு எபோலா பரிசோதனைக்காக வழங்குவதாக அறிவித்தது. சின்குவா அறிக்கையின்படி, இதுநாள் வரை மருத்துவ பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இபோலா தடுப்பூசி கேம்இவாக்-காம்பி (GamEvac-Combi) மட்டுமே.[5] கோவிட் -19 தடுப்பு மருந்துமே 2020 இல் இந் நிறுவனம் கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சிகளை தொடங்கியது.[6] கோவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனைகள் 18 சூன் 2020 இல் நிறைவடைந்தது. மற்றும் இரண்டாவது கட்டம் சூலை 2020 இல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.[7] மனித சோதனைகள் 18 சூன் அன்று தொடங்கியது.[8] 11 ஆகத்து 2020 அன்று, உருசியா சனாதிபதி விளாடிமிர் பூட்டின், உலகின் முதல் COVID-19 தடுப்பூசியை காம்-கோவிட்-வெக் என்ற தலைப்பில் உருவாக்கியது என்று அறிவித்தார்.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia