கமிந்து மெண்டிஸ்
கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis, பிறப்பு: செப்டம்பர் 30, 1998) என்பவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார் .இவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பன்னாட்டு இருபது 20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் ஒரே ஓவரில் இரு கைகளிலும் பந்துவீசும் திறமை கொண்டவர் ஆவார்.[1] 2018 ஆம் ஆண்டில் இவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். மேலும் கொழும்பு துடுப்பாட்ட அணிக்காக இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[2] இடதுகை மட்டையாளரன இவர் சகலத் துறையரான இவர் இலங்கை தேசிய அணி தவிர கொழும்பு துடுப்பாட்ட அணி, 19 வயதிற்கு உடபட்ட இலங்கை அணி, தமிழ் யூனியன் துடுப்பாட்ட மற்றும் தடகள சங்கம் ஆகிய அணிகளுக்காகவும் இவர் விளையாடி வருகிறார். ஆரம்ப கால மற்றும் உள்ளூர் துடுப்பாட்ட போட்டிகள்மென்டிஸ் தனது 13 வயதில் காலியில் உள்ள ரிச்மண்ட் கல்லூரிக்கு துடுப்பாட்டவிளையாடும்போது இரு கைகளாலும் பந்து வீசத் தொடங்கினார். 30 நவம்பர் 2015 அன்று ஏ.ஐ.ஏ பிரீமியர் லிமிடெட் ஓவர் போட்டியில் சரித் அசலங்காவுடன் இணைந்து பட்டியல் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[3] அடுத்த மாதம், இவர் 2016 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்டஉலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பெற்றார்.[4] இவர் டிசம்பர் 2016 இல் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராகப் அறிவிக்கப்பட்டார் [5] மற்றும் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் 19 வயதிற்குட்பட்ட இலங்கை துடுப்பாட்ட அணியின் அணியின் தலைவராக இருந்தார்.[6] 2018 எஸ்.எல்.சி டி 20 லீக் அணியில் இடம் பெறுவதற்கு முன்னர் இவர் 2017–18 சூப்பர் நான்கு மாகாண போட்டி மற்றும் 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றார். இவர் 21 ஆகஸ்ட் 2018 அன்று கொழும்புக்காக தனது இருபதுக்கு போட்டியில் அறிமுகமானார்.[7] 30 நவம்பர் 2018 அன்று நடைபெற்ற 2018–19 பிரீமியர் லீக் போட்டியில் தமிழ் யூனியன் துடுப்பாட்ட மற்றும் தடகள சங்கத்திற்காக முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[8] மார்ச் 2019 இல், இவர் 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கொழும்பு அணியில் இடம் பெற்றார் .[9] சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகள்ஆகஸ்ட் 2018 இல், இலங்கை துடுப்பாட்ட2018 ஆசிய கோப்பைக்கான 31 வீரர்களைக் கொண்ட ஆரம்ப அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.[10] 2018ம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் தேர்வானார் .[11] இவர் 27 அக்டோபர் 2018 அன்று இங்கிலாந்துக்கு எதிராக இலங்கைக்காக தனது தினார். இந்த போட்டியில் இவர் 24 ரன்கள் எடுத்தார். 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான துடுப்பாட்டத் தொடரில் இவர் விளையாடினார்.2019ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். மார்ச் 10இல் டர்பன் துடுப்பாட்ட அரங்கத்தில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலிவர் அறிமுகமானார்.[12] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia