கமெல்னிட்ஸ்கி மாகாணம்
கமெல்னிட்ஸ்கி மாகாணம் (Khmelnytskyi Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கமெல்னிட்ஸ்கி நகரம் ஆகும். இரண்டாம் உலகப் போரில் இம்மாகாணம், ஜெர்மன் நாஜிப் படைகள் ஆக்கிரப்பு செய்தது. 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,43,787 ஆகும். புவியியல்20,600 km2 (7,953.70 sq mi) பரப்பளவு கொண்ட கமெல்னிட்ஸ்கி மாகாணத்தின் வடமேற்கில் ரைவன் மாகாணம், வடகிழக்கில் சைதோமிர் மாகாணம், கிழக்கில் வின்னித்சியா மாகாணம், தெற்கில் செர்னிவ்சி மாகாணம், மேற்கில் தெர்னோப்பில் மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணத்தில் தினிஸ்டர் ஆறு பாய்கிறது. மாகாண ஆட்சிப் பிரிவுகள்கமெல்னிட்ஸ்கி மாகாணம் 3 மாவட்டங்கள், 6 பெரிய நகரங்கள், 1416 கிராமங்கள் கொண்டது. மக்கள் தொகை பரம்பல்2022ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாகாணத்தின் மக்கள் தொகை 14,01,140 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 46.1% மற்றும் பெண்கள் 53.9% ஆக உள்ளனர். பொருளாதாரம்இம்மாகாணத்தின் முக்கியத் தொழில்கள் எரிசக்தி தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் வேளாண்மை ஆகும். கமெல்னிட்ஸ்கி அணுசக்தி நிலையம் மின் உற்பத்தி செய்கிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia