கய்டு-குப்லாய் போர்
கய்டு-குப்லாய் போர் என்பது கய்டு மற்றும் குப்லாய்க்கு இடையே நடந்த ஒரு போராகும். இது கய்டு மற்றும் குப்லாய்க்குப் பின்வந்த தெமூருக்கு இடையிலும் நடந்தது. கய்டு என்பவர் ஒக்தாயி குடும்பத்தின் தலைவர் மற்றும் சகதாயி கானரசின் நடைமுறைப்படியிலான கான் ஆவார். குப்லாய் யுவான் அரசமரபைத் தோற்றுவித்தவர் ஆவார். இப்போர் டொலுய் உள்நாட்டுப் போருக்குப் பிறகு நடந்தது. இதன் காரணமாக மங்கோலியப் பேரரசு நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டது. 1294ஆம் ஆண்டு குப்லாய் இறந்தபோது மங்கோலியப் பேரரசானது நான்கு அரசியலமைப்புகளாகப் பிரிந்திருந்தது. அவை வடமேற்கிலிருந்த தங்க நாடோடிக் கூட்டம், நடுவிலிருந்த சகதாயி கானரசு, தென்மேற்கிலிருந்த ஈல்கானரசு, தற்கால பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட கிழக்கிலிருந்த யுவான் அரசமரபு.[1] கய்டுவின் இறப்பிற்குப் பிறகு 1304ஆம் ஆண்டு மூன்று மேற்குக் கானரசுகளுடன் தெமூர் அமைதி ஏற்படுத்திக் கொண்டபோதும் மங்கோலியப் பேரரசின் நான்கு கானரசுகளும் தத்தமது தனித்தனி வழியைப் பின்பற்ற ஆரம்பித்தன. வெவ்வெறு காலங்களில் வீழ்ச்சியடைந்தன.[2][3] ![]() யுவான் அரசமரபு தங்க நாடோடிக் கூட்டம் சகதாயி கானரசு ஈல்கானரசு மேலும் காண்கஉசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia