கரண் சிங் குரோவர்
கரண் சிங் குரோவர் (Karan Singh Grover) இவர் இந்தியாவில் உள்ள புது தில்லியில் 1982 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 23 ஆம் தேதி பிறந்தார்.[1][2] தில் மில் கயே மற்றும் குபூல் ஹை போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகர் ஆவார். இவர் அலோன் மற்றும் ஹேட் ஸ்டோரி 3 போன்ற இந்தி திரை படங்களிலும் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில், குரோவர் கசௌதி ஜிந்தகி கே 2 என்ற தொடரின் மூலம் மிஸ்டர் ரிஷப் பஜாஜ் என்ற பெயரில் தொலைக்காட்சியில் மீண்டும் தோன்றினார்.[6][7] 2019 ஆம் ஆண்டில், குரோவர் பாசு ப்பப் ஆப் சிறப்பு சேவை மூலம் டிஜிட்டல் அறிமுகத்தையும் செய்தார். 2020 ஆம் ஆண்டில், இஅவர் டேஞ்சரஸ் என்ற ஆக்ஷன்-த்ரில்லர் வலைத் தொடரில் தோன்றினார்.[8] 2021 ஆம் ஆண்டில், குபூல் ஹையின் மறுதொடக்கமான குபூல் ஹை 2.0 என்ற வலைத் தொடரில் தோன்றினார்.[9] 2024 ஆம் ஆண்டில், குரோவர் பைட்டர் என்ற படத்தில் நடித்தார் ஆரம்பகால வாழ்க்கைகுரோவர் ஒரு பஞ்சாபி சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.[10] அவருக்கு ஒரு இளைய சகோதரர் உள்ளார்.[11] குரோவர் இளமையாக இருந்தபோது, இவரது குடும்பம் சவுதி அரேபியாவின் அமைந்துள்ள அல் கோபருக்கு குடிபெயர்ந்தது.[10] அவர் சவுதி அரேபியாவின் தம்மம் நகரில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார், மேலும் மும்பையில் உள்ள ஐ எச் எம் இல் ஓட்டல் மேலாண்மையில் பட்டம் பெற்றார். பின்னர் இவர் ஓமானில் உள்ள ஷெரட்டன் ஓட்டலில் சந்தைப்படுத்தல் நிர்வாகியாகப் பணியாற்றினார்.[10] தனிப்பட்ட வாழ்க்கை![]() குரோவர் நடிகை ஷ்ரத்தா நிகாமை 2008 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம், 2ஆம் தேதி அன்று மணந்தார். 10 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் மணமுறிவு செய்தனர்.[3] இவர் 2012 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 9 ஆம் தேதியன்று ஜெனிபர் விங்கெட் என்பவரை மணந்தார்.[4] இவர்கள் 2014 ஆம் ஆண்டில் பிரிந்தனர்.[12] குரோவர் நடிகை பிபாஷா பாசுவை என்பவரை 2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 30 ஆம் தேதியன்று மணந்தார்.[13] 2022 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், தனக்கு முதல் குழந்தையை பிறக்கும் என எதிர்பார்ப்பதாக பாசு உறுதிப்படுத்தினார்.[14] 2022 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 12 ஆம் தேதி குரோவர் மற்றும் பாசுவின் மகள் தேவி பாசு சிங் குரோவர் பிறந்தார்.[15] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia