கரிமநையோபியம் வேதியியல்கரிமநையோபியம் வேதியியல் (Organoniobium chemistry) என்பது நையோபியம்-கார்பன் பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்களைப் பற்றி ஆய்வுசெய்கின்ற வேதியியல் துறையாகும். கரிமநையோபியம் சேர்மங்களில் நையோபியம் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. நையோபியம்(V) குளோரைடு ஓர் ஏற்புடைய தொடக்க வினைபொருளாகத் திகழ்கிறது. கரிமநையோபியம் சேர்மங்கள் பெரும்பாலும் ஆக்சைடுகவரிகளாக உள்ளன. கரிம டாண்ட்டலம் மற்றும் கரிமநையோபியம் வேதியியல் இடையே ஏராளமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கரிமடாண்ட்டலம் சேர்மங்கள் ஒடுக்கம் அடைவதை எதிர்க்கின்றன. அடிப்படைச் சேர்மங்கள்Nb(IV) அயனியின் வழிப்பெறுதியாக மெட்டலோசின் வகை நையோபியம் டைகுளோரைடு ((C5H5)2NbCl2) உருவாகிறது[1]. இது காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து Nb(V) அயனியின் வழிப்பெறுதியாக Cp2NbOCl என்ற ஓர் ஆக்சிகுளோரைடை உருவாக்குகிறது. போன்ற (C5Me5)2NbH3 பென்டாமெத்தில்வளையபென்டாடையீன் வழிப்பெறுதிகளும் அறியப்படுகின்றன. [Nb(CO)6]− என்ற எதிர்மின் அயனி நையோபியத்தின் ஓர் எளிய கார்பனைல் சேர்மமாகும். சோடியம் – பொட்டாசியம் கலப்புலோகத்தைப் பயன்படுத்தி கார்பனோராக்சைடு சூழலில் NbCl5 சேர்மத்தை ஒடுக்குவதன் வழியாக இக்கார்பனைல் தயாரிக்கப்படுகிறது[2] . மேற்கோள்கள்
. |
Portal di Ensiklopedia Dunia