கருநாடக நாட்டார் வழக்காற்றியல் பல்கலைக்கழகம்
கருநாடகா நாட்டார் வழக்காற்றியல் பல்கலைக்கழகம் (Karnataka Folklore University) என்பது கர்நாடகா ஜானபதா விசுவவித்யாலயா என்றும் அழைக்கப்படுகிறது.[2] இது இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்காகப் பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு கர்நாடக அரசால் ஆவேரி மாவட்டத்தில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் அம்பலிகே அரியன்ன ஆவார்.[3] இப்பல்கலைக்கழகம் உலகின் முதல் நாட்டுப்புறக் கலைகளுக்காக நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் என்று கூறப்படுகிறது.[4] இது 16 சூன் 2012 அன்று அப்போதைய கருநாடக முதல்வர் டி. வி. சதானந்த கவுடாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் கருநாடாகவில் சிகாவ்ன், கோடகோடியில் அமைந்துள்ளது.[3] இங்கு நாட்டார் வழக்காற்றியலின் பல்வேறு துறைகளில் முதுகலை, மேலாண்மை, ஆய்வு நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.[3] துறைகள்பொது நாட்டுப்புறவியல்
வாய்மொழி நாட்டுப்புறவியல்
பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள்
பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
உரைவடிவ ஆய்வுகள்
பயன்பாட்டு நாட்டுப்புறவியல்
சமூக அறிவியல்
மானுடவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia