கருநாடக - மேலைத்தேச இசைகள் ஒப்பீடு

கருநாடக இசைக்கும் மேலைத்தேச இசைக்கும் இடையான வேறுபாடுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

இல கர்நாடக இசை மேலைத்தேச இசை
1 72 தாய் ராகங்கள் உண்டு. மேஜர்ச்கேல், மைனர்ச்கேல் என 2 மேளம்.
2 இராகத்தை விஸ்தாரமாகப் பாடலாம். Notation லிருந்து வாசிக்கலாம்.
3 கமகங்கள் காணப்படுகின்றன. அவ்வாறு இல்லை.
4 வாய்ப்பாட்டு இசைக்கு கூடுதல் முக்கியத்துவம். கூட்டு வாத்திய இசைக்கு கூடுதல் முக்கியத்துவம்.
5 இசையை விளக்க வீணை வாத்தியம். எல்லா நுட்பத்தையும் கொண்ட பியானோ.
6 பஞ்சகதி பேதம் உண்டு. சதுசுரகதி, திசுரகதி பேதங்களே உண்டு.
7 கச்சேரியில் 2-5 பேர் பக்கவாத்தியம் வாசிப்பர். அதிக வாத்தியக்காரர் கலந்து கொள்வர்.
8 தெய்வ சங்கீதம். லெளகீக சங்கீதம்.
9 சரிகமபதநி- சப்தசுவரங்கள். CDEFGAB- 7 சுவரங்கள்.
10 பாடல் எழுதுவது- script notation எனப்படும். பாடல் எழுதுவது- staff notation எனப்படும்.
11 குரல் வளத்திற்கு ஏற்ப சுருதியை நிர்ணயிக்கலாம். பாடல் எந்த சுருதியில் உள்ளதோ அதிலேயே பாட வேண்டும்.
12 இன்னிசை எனப்படும். ஒத்திசை எனப்படும்.
13 மனோதர்ம சங்கீதம் உண்டு. அவ்வாறில்லை.
14 பெருமளவு ராகம், தாளம் உண்டு. அவ்வாறில்லை
15 ஒரு சுவரத்தின் பின்பே அடுத்த சுவரம் ஒலிக்கும். ஒரே நேரத்தில் பல சுவரம் ஒலிக்க முடியும்.
16 மெலடிக்கல் இசை. ஹார்மனிக்கல் இசை.
17 சங்கராபரணத்தை அடிப்படையாக வைத்து Notation எழுதப்படும். அவ்வாறில்லை.
18 22 சுருதி போன்ற நுட்ப சுருதிகள் பயன்படுத்தப்படும். நுட்ப சுருதிகள் இல்லை.
19 பாட்டை கற்க ஆசிரியர் வேண்டும். Notation ஐப் பார்த்து கற்பது கடினம். Notation ஐப் பார்த்து வாசிக்கலாம்.
20 இராக ஆலாபனை முக்கிய இடம் வகிக்கிறது. சுருதியை அடிக்கடி மாற்றி வாசிப்பதைக் காணலாம். ராகம் என்பது கிடையாது.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya