கருநீலம்![]()
கருநீலம் என்பது Indigofera tinctoria என்ற தாவரத்தையும், அதனை அண்டிய இனங்களிலிருந்தும் பெறப்படும் நீலச் சாயத்தினைச் சார்ந்து பெயரிடப்பட்ட நிறங்களில் ஒன்றாகும். மின்காந்த நிழற்பட்டையில், இந்த கருநீல நிறமானது 420 - 450 நானோமீட்டர் (nm) அலைநீளத்தைக் கொண்டிருப்பதுடன், நீலம், ஊதா நிறங்களுக்கிடையே அமைந்துள்ளது. மரபுவழியில் இந்த நிறமானது வானவில் நிறங்களில் ஒன்றாக, கட்புலனாகும் நிறமாலை யில் ஒன்றாக கருதப்பட்டிருந்த போதிலும், நவீன நிற அறிவியல் அறிஞர்க்ள் இந்த நிறத்தை ஒரு தனிப்பிரிவாகக் கருதாது, 450 nm அலைநீளத்துக்குட்பட்டதாக ஊதா நிறத்துடன் சேர்த்தே வகை பிரிக்கின்றனர்.[2] ஒளியியலுக்குரிய அறிவியல் அறிஞர்களான ஹார்டியும் பெரினும் (Hardy and Perrin) இந்த கருநீல நிறத்தை அலைநீள பட்டியலில் 446 - 464 nm வரிசைப்படுத்தினர்[3]. வரலாறு![]() Indigofera tinctoria கருநீலச் சாயமானது பல்லாண்டுகளுக்கு முன்னர், கிரேக்க-ரோமன் சகாப்தத்திலேயே, இந்தியாவிலிருந்தே ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது. கிரேக்க மொழியில் இண்டிகோன் (indikon) என்பது சாயத்தைக் குறிக்கும். ரோமன் மொழியில் இண்டிக்கம் (indicum) என்ற சொல்லும் இதனையே குறிக்கும். இந்தச் சொல்லானது, இத்தாலிய மொழியின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திற்கு வரும்போது இண்டிக்கோ (indigo) என்ற பெயரைப் பெற்றதாக நம்பப்படுகின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia