கருவறைப் பூக்கள் (Karuvarai Pookkal), 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தின் கதை உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. எஸ். லூர்து சேவியரின் இயக்கத்தில் வெளியான இத் திரைப்படத்தில் ஜூலியா இராபர்ட்டும் லிவிங் ஸ்மைல் வித்யாவும் கோபி/கோபிகா என்ற திருநங்கை கதாபத்திரத்திலும், பல்லவி விதவைத் தாயாகவும், அசுவதாவும் ஹாரிசும் சகோதரி மற்றும் சகோதரனாகவும் நடித்துள்ளனர்.[1][2][3]
கதைச் சுருக்கம்
திருநங்கைகள் குறித்த முதல் தமிழ்த் திரைப்படம் கருவறைப் பூக்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டுள்ளது. திருநங்கையாக ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை திருநங்கையாக இருந்தால் அக் குழந்தையும் அக்குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகளையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்டுள்ளது.
உண்மையிலேயே திருநங்கைகளான ஜூலியா இராபர்ட் மற்றும் லிவிங் ஸ்மைல் வித்யா இருவரும் இப் படத்தில் வரும் கோபி/கோபிகா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[4]
இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் தாமஸ் இரத்தினம். இவர் தமிழ், ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் ஆவணப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.