கரு. ஆறுமுகத்தமிழன்

கரு. ஆறுமுகத்தமிழன் (Karu. Arumugatamilan, 1970, பிறப்பு: ஆறுமுகம்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சைவ சமய மெய்யியலாளர், பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர் ஆவார்.

பிறப்பும், கல்வியும்

ஆறுமுகத்தமிழன் தமிழ்நாட்டின் காரைக்குடியில் 1970 இல் பிறந்தார். இவரது பெற்றோர் பழ. கருப்பையா, கமலா ஆவர். மதுரை இலட்சுமிபுரம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் துவக்கக் கல்வி பயின்றார். மதுரை செளராட்டிரா பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயின்றார். சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிசன் விவேகானந்தா கல்லூரியில் மெய்யியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். அதே கல்லூரியில் திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப்பட்டமும், பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றார்.

குடும்பம்

கரு. ஆறுமுகத்தமிழன் 2003 ஆம் ஆண்டு முத்துலட்சுமி என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு கமலா, மெய்யம்மை என இரு மகள்கள் உண்டு.

தொழில்

கரு. ஆறுமுகத்தமிழன் சென்னைப் பல்கலைக்கழகம், மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, பூந்தமல்லி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். கல்லூரிகளில் இந்திய மெய்யியல், சைவ சித்தாந்தம் குறித்த வகுப்புகளை எடுத்தார். சென்னை, விவேகானந்தர் கல்லூரியின் மெய்யியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1]

எழுதிய நூல்கள்

  • திருமூலர்: காலத்தின் குரல் (2004, தமிழினி)
  • நட்ட கல்லைத் தெய்வமன்று (2011, தமிழினி)
  • உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 1 (இந்து தமிழ் திசை)[2]
  • உயிர் வளர்க்கும் திருமந்திரம் பாகம் 2 (இந்து தமிழ் திசை)
  • பெண் உகந்த பெரும்பித்தன்: திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் (2023. தமிழினி)
  • நாமார்க்கும் குடியெல்லோம்
  • The Yoga of Siddha Thirumular: Essays on Thirumandiram
  • TIRUMANDIRAM (தொகுதி 1-10) (மொழிபெயர்ப்பு)

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya